நாங்கள் ஆட்சிக்கு வந்தால் 5 புரட்சிகர பணிகளை செய்வோம்: ராகுல் காந்தி..!
ஒடிசா மாநிலம் கேந்திரபாரா மாவட்டத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் ராகுல் பேசியதாவது: பிரதமர் மோடி கோடீஸ்வரர்களுக்காக ஆட்சி நடத்துகிறார். சுரங்க ஊழல் மூலம் ஒன்பது லட்சம் கோடி கொள்ளையடிக்கப்பட்டது. நில அபகரிப்பு மூலம் 20,000 கோடி கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் ஆட்சி அமைந்தவுடன், உங்கள் பணத்தைத் திருப்பித் தருவோம்.
ஒடிசா மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைத்தால், பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.2 ஆயிரம் வழங்கப்படும். வேலையில்லாத இளைஞர்களுக்கு ஒவ்வொரு மாதமும் ரூ.3 ஆயிரம் வழங்கப்படும். 200 யூனிட் வரை இலவச மின்சாரம் வழங்கப்படும். காஸ் சிலிண்டர் 500 ரூபாய்க்கு வழங்கப்படும். மத்தியில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் 5 புரட்சிகர பணிகளை செய்வோம். அனைத்து ஏழை குடும்பங்களின் பட்டியல் தயாரித்து, குடும்பத்தில் இருந்து ஒரு பெண் தேர்வு செய்யப்பட்டு, அவரது வங்கிக் கணக்கில் ஆண்டுக்கு 1 லட்சம் ரூபாய் வரவு வைக்கப்படும். வேலையில்லாத இளைஞர்களுக்கு ஒரு வருடத்திற்கு தொழிற்பயிற்சி வழங்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.