நாங்கள் ஆட்சிக்கு வந்தால் சிஎஸ்கே அணியில்...
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் நடைபெற்ற வீரவணக்க பொதுக்கூட்டத்தில் பேசிய சீமான், ''கட்சி தொடங்கிய காலத்தில் இருந்து, எவரோடும் சமரசம் இல்லை, எவரோடும் கூட்டணியும் இல்லை. நோட்டுக்கும், சீட்டுக்கும் எவரோடும் பேரமில்லை. சாவோ, வாழ்வோ தனித்துதான். வெற்றியோ, தோல்வியோ தனித்துதான். ஒத்தையடி பாதையில்தான் செல்வேன். 8 வழி சாலையில செல்வது திமுக, பிஜேபி தான். சிஎஸ்கேனு ஒரு கிரிக்கெட் அணி இருக்குல. அதுல, ஒருத்தர் கூட தமிழர் கிடையாது. நாம் ஆட்சிக்கு வந்தால், 11 வீரர்களும் தமிழனாகதான் இருப்பான், உங்க அண்ணனும் வந்து விளையாடுவேன்'' எனக் கூறினார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தமிழர்கள் இல்லை என்ற வருத்தம் பலருக்கும் இருக்கிறது. அது நாம் ஆட்சிக்கு வந்தவுடன் போய் விடும். சென்னை பெயரில் விளையாடும் அணியில் தமிழர்கள் இல்லை என்பதை ஏற்க முடியாது. நாம் அதிகாரத்துக்கு வரும் போது அது மாற்றப்படும்" என்றார்.