இதை செய்யவில்லை என்றால் இனி ரேஷன் பொருட்கள் வழங்கப்படமாட்டாது..!

இந்திய குடிமகனின் முக்கிய அடையாள ஆவணமாக ஆதார் கார்டு விளங்கி வருகிறது. மேலும், கட்டாயமாக அரசின் அனைத்து சலுகைகளையும் பெற விரும்பினால் குறைந்தது 10 ஆண்டுகளுக்கு ஒரு முறையாவது ஆதார் கார்டினை அப்டேட் செய்திருக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வருகிறது.
இதனிடையே, தற்போது பொது மக்களின் வசதிக்காக ஆதார் கார்டில் முகவரி, புகைப்படம் ஆகியவற்றை அப்டேட் செய்வதற்கு டிசம்பர் 14 ஆம் தேதி வரையிலும் கால அவகாசம் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், ஆதார் கார்டினை அப்டேட் செய்தால் மட்டுமே ரேஷன் பொருட்களை பெற முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, தற்போது வரையிலும் அப்டேட் செய்யாமல் வைத்திருக்கும் குடிமக்கள் my aadhaar என்கிற போர்ட்டல் வழியாக ஆதார் தகவல்களை இலவசமாகவே அப்டேட் செய்து கொள்ளலாம். மேலும், ஆதார் மையங்கள் மூலமாக அப்டேட் செய்ய ரூ.25 கட்டணம் செலுத்தி அப்டேட் செய்துகொள்ளவும்.