1. Home
  2. தமிழ்நாடு

இது மட்டும் நடந்தால் கட்சியை கலைத்து விடுவேன் - சீமான்..!

Q

ஆதித்தனாரின் நினைவுநாளையொட்டி நாம் தமிழர் கட்சி சார்பில் சென்னை எழும்பூரிலுள்ள அவரது சிலைக்கு மே 24-ம் தேதி மாலை அணிவித்து மரியாதை செய்தார் சீமான். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், ``வாயு கசிவை ஏற்படுத்திய கோரமண்டல் நச்சு ஆலை குறித்து பசுமை தீர்ப்பாயம் வழங்கியிருக்கும் தீர்ப்பு ஏமாற்றமளிக்கிறது. தமிழ்நாடு அரசு அந்த ஆலையை திறக்க உத்திரவிடக் கூடாது.

மேலும், `சிலந்தி ஆற்றின் குறுக்கே கட்டப்படும் அணை கட்டுமானத்தை நிறுத்தபட வேண்டும். தி.மு.க-வின் கூட்டணி கட்சிதானே கம்யூனிஸ்ட் அவர்களுடன் பேசி கட்டுமானத்தை நிறுத்த வேண்டியதுதானே’ என கேட்டார்.

தென்மாநிலங்களில் பா.ஜ.க தவிர்க்க முடியாத சக்தியாக வரும் என அண்ணாமலை நம்புகிறாரே என கேட்கப்பட்ட கேள்விக்கு, ``முதலில் தனித்து நிற்க பா.ஜ.க-வுக்கு துணிவு இருக்கா? ஜூன் 4-ம் தேதிக்கு பிறகு தனித்து பா.ஜ.க பெறப்போகும் வாக்குகள் எவ்வளவு எனத் தெரிந்துவிடும். கூட்டணியாக இல்லாமல் தனித்த பா.ஜ.க-வின் வாக்கு சதவீதம் நாம் தமிழர் கட்சியைவிட அதிகமாக இருந்தால் கட்சியை கலைத்துவிட்டு செல்கிறேன்” என சவால் விட்டார் சீமான்.

Trending News

Latest News

You May Like