1. Home
  2. தமிழ்நாடு

இந்த வருடம் போதிய மழை இல்லையென்றால் கோவை மக்களின் நிலை கொஞ்சம் கஷ்டம் தான்..!

1

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் உள்ள பில்லூர் அணை கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களுக்கு மிக பெரும் நீர் ஆதாரமாக உள்ளது. 100 அடி கொள்ளளவை கொண்ட இந்த அணையில் இருந்து கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்கள் தினமும் சுமார் 40 கோடி லீடர்களுக்கும் அதிகமான நீரை எடுத்து பயன்படுத்துகின்றனர்.

இந்த அணையில் நீர் அளவு தற்போது 66 அடியாக உள்ளது. அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான நீலகிரி மற்றும் கேரள மலைக்காடுகளில் ஜனவரி மாதம் முதல் பெரிய அளவில் மழை பொழிவு இல்லை.  மேலும் சில காரணங்களால் அணைக்கு குந்தா அணையிலிருந்து வரும் நீர் திறந்து விடப்படாமல் உள்ளது.

அவ்வாறு திறந்து விட்டிருந்தால் பில்லூர் அணையில் நீர்மட்டம் உயர்ந்திருக்கும் என கூறப்படுகிறது. எனவே கோவை, திருப்பூர் மக்கள் தேவையை கருத்தில் கொண்டு நீரை திறந்து விட அரசு துறை அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர்.

விரைவில் இதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டாலும், பில்லூர் குடிநீர் திட்டம் மட்டும் போதுமா என்றால் தற்போதைய நிலவரம் படி போதாது என தான் தோன்றுகிறது. காரணம் 2 நாட்களுக்கு முன்னர் சிறுவாணி அணையின் நீர் அளவு 24 அடியாக உள்ளது என தகவல்கள் வெளியானது.

கோவை மாநகரம் மட்டுமே கடந்த திங்கள் இரவு முதல் நாள் ஒன்றுக்கு சிறுவாணி அணையிலிருந்து 55 கோடி லிட்டர் நீரை பயன்படுத்தி வருகின்றோம். இதை வைத்து கோடை முடியும் வரை தாக்கு பிடிக்க முடியுமா என்பது சந்தேகமே.  எனவே கோவைக்கு நீராதாரமாக விளங்கும் சிறுவாணி ஆணை, பில்லூர் ஆணை மற்றும் பவானி ஆறு ஆகிய இடங்களில் கோடை மழை சிறப்பாக துவங்கினால் தான் கோவை மக்களுக்கும் அனைவருக்கும் இந்த கோடை வசந்த காலமாக இருக்கும்.  

வழக்கத்தை விட இம்முறை கோடை வெப்பம் பிப்ரவரிக்கு முன்னரே துவங்கியதை காணமுடிந்தது. இந்த ஆண்டு கோடை காலம் என்பது வழக்கத்தை விட சற்று கடுமையாக இருக்கலாம் கருதப்படுகிறது. 

Trending News

Latest News

You May Like