செந்தில் பாலாஜி கைதில் சட்டமீறல் இருந்தால் அமலாக்கத்துறையினரை கூண்டில் ஏற்றலாம் : நீதிபதி அதிரடி..!

செந்தில் பாலாஜியின் மனைவி ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்திருந்தார். 3-வது நீதிபதி கார்த்திகேயன் முன்னிலையில் நேற்று விசாரணை நடைபெற்றது. செந்தில்பாலாஜி தரப்பில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபிலின் வாதங்கள் முடிந்த நிலையில், என்.ஆர் இளங்கோ வாதங்களை முன் வைத்தார். செந்தில் பாலாஜி வழக்கில் ஆட்கொணர்வு மனுவை இருநீதிபதிகளுமே ஏற்றுள்ளனர்.
நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்ட பிறகு எப்படி ஆட்கொணர்வு மனு வழக்கு தொடர முடியும் என கேட்கிறார்கள் ? கைதில் அடிப்படை உரிமை விதிகள் மீறப்பட்டால் ஆட்கொணர்வு வழக்கு தொடர முடியும் என என்.ஆர். இளங்கோ வாதிட்டார்.
மேலும், நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட மருத்துவமனை வந்தபோதே, கைதுக்கான காரணங்கள் கூறப்படவில்லை. தனது கைதுக்கான காரணம் கூறப்படவில்லை என நீதிபதியிடம் செந்தில் பாலாஜி தெரிவித்தார். அரசியலமைப்பு சட்டப்பிரிவு 22-ன்படி கைதுக்கான காரணங்கள் கூறப்பட வேண்டும். செந்தில் பாலாஜி கைது மெமோவில் கைதுக்கான காரணம் எங்கும் கூறப்படவில்லை. கைது மெமோவில் அமைச்சர் ஒத்துழைக்கவில்லை என்று மட்டுமே கூறப்பட்டுள்ளது என தெரிவித்தார்.
தொடர்ந்து வாதிட்ட என்.ஆர் இளங்கோ, ஒரு மணி நேரத்திற்குள் 11 பக்கங்களில் கைது செய்யப்பட்டதற்கான காரணங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. கைதுக்கான காரணங்கள் எங்கு டைப் செய்யப்பட்டது என்று எங்களுக்கு தெரியாது. செந்தில் பாலாஜி கைது நடவடிக்கையில் அரசியலமைப்பு சட்டப்பிரிவு 21 முழுமையாக மீறப்பட்டுள்ளது.
செந்தில் பாலாஜி கைதில் சட்டமீறல் இருந்தால் அமலாக்கத்துறை அதிகாரிகளை கூண்டில் ஏற்றலாம் கூறிய நீதிபதி சிவகார்த்திகேயன், செந்தில் பாலாஜியின் ஆட்கொணர்வு வழக்கை இன்று ஒத்தி வைத்தார். இன்று அமலாக்கத்துறை தரப்பில் வழக்கறிஞர் துஷார் மேத்தா வாதங்களை முன்வைக்க உள்ளார்.