1. Home
  2. தமிழ்நாடு

ரயில்வே ஊழியர்கள் எச்சரிக்கையாக இருந்திருந்தால் பெரும் விபத்தை தவிர்த்திருக்கலாம்..!

1

கடந்த ஜூன் 2-ம் தேதி ஒடிசாவில் அடுத்தடுத்து மூன்று ரயில்கள் மோதி விபத்துக்குள்ளானது. நாட்டையே உலுக்கிய இந்த கோர ரயில் விபத்தில் 293 பேர் பலியாகினர், 1,200-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.  தென்கிழக்கு ரயில்வேயின் பொது மேலாளர் அனில் குமார் மிஸ்ரா செய்தியாளர்களிடம் கூறியது, தவறான சிக்னல் வழங்கப்பட்டதே இதற்கு முக்கிய காரணம். ரயில்வே ஊழியர்கள் எச்சரிக்கையாக இருந்திருந்தால் பெரும் விபத்தை தவிர்த்திருக்கலாம். 

இந்த விவகாரம் தொடர்பாக சிபிஐ கைதுசெய்யப்பட்ட மூவர் உள்பட ரயில்வே நிர்வாகம் ஏழு அதிகாரிகளை இடைநீக்கம் செய்துள்ளது. முன்னதாக, பாலசோர் மாவட்ட ரயில்வே சிக்னல் பிரிவு மூத்த பொறியாளர் அருண் குமார் மகந்தா, பிரிவு பொறியாளர் முகமது ஆமீர் கான், தொழில்நுட்ப ஊழியர் பப்பு குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இவர்களின் 5 நாள் நீதிமன்ற காவல் செவ்வாய்க்கிழமையுடன் நிறைவடைந்த நிலையில் நேற்று சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். இந்நிலையில், மூவரின் நீதிமன்ற காவல் புதன்கிழமை(நேற்று) முதல் மேலும் நான்கு நாள்கள் நீட்டித்துள்ளது. 

Trending News

Latest News

You May Like