நான் தற்கொலை செய்து கொண்டேன் என்ற செய்தி வந்தால் அது தற்கொலை அல்ல கொலை : டிடிஎஃப் வாசன்..!
அதிவேகமாக பைக்குகளில் ட்ராவல் செய்து அதனை வீடியோக்களாக மாற்றி ட்வின் த்ரோட்லர்ஸ் எனும் தன்னுடைய யூடியூப்பில் பதிவிட்டு பிரபலமானவர் கோவையைச் சேர்ந்த டிடிஎஃப் வாசன்.
தற்போது டிடிஎஃப் வாசன் மஞ்சள் வீரன் என்ற திரைப்படத்தின் மூலம் படத்தின் சினிமாவில் அறிமுகமாகவுள்ளார். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலானது.சமீபத்தில் டிடிஎஃப் வாசன் சென்ற கார் நிலை தடுமாறி விபத்துக்கு உள்ளானது. இதற்கு சில மீடியாக்கள் டிடிஎஃப் வாசன் விபத்து ஏற்படுத்தி அங்கு இருந்து ஆட்டோவில் தப்பி ஓடியதாக கூறப்பட்டது.
இந்நிலையில் இது குறித்து பேசிய டிடிஎஃப் வாசன், அந்த காரை நான் ஓட்டவில்லை இயக்குனர் தான் ஓட்டினார். அந்த சமயத்தில் கார் நிலைதடுமாறி விபத்துக்கு உள்ளானது.
காரின் முன்னாள் சென்று கொண்டிருந்த ஒருவருக்கு சிறு சிறு காயங்கள் ஏற்பட்டது. நான் உடனடியாக முதல் உதவி செய்து மருத்துவமனைக்கு ஆட்டோவில் அழைத்து சென்றோம் ஆனால் மீடியாக்கள் என் மீது பொய்யான தகவலை பரப்பியதாக கூறியுள்ளார்.
மேலும் அவர், என்னை தற்கொலைக்கு தூண்டும் வகையில் சிலர் நடந்து கொள்கிறார்கள். நான் தற்கொலை செய்து கொண்டேன் என்ற செய்தி வந்தால் அதை யாரும் நம்பாதீர்கள் அது ஒரு திட்டமிட்ட கொலை என்று கூறியுள்ளார்.