1. Home
  2. தமிழ்நாடு

கொரோனா வந்தால் காதும் கேட்காது.. ஆய்வில் அதிர்ச்சி முடிவு !

கொரோனா வந்தால் காதும் கேட்காது.. ஆய்வில் அதிர்ச்சி முடிவு !


கொரோனா வைரஸ் பாதிப்பு உலகம் முழுவதும் அதிகரித்து தான் வருகிறது. குறைவது போன்று தெரிந்தாலும் அடுத்த சில நாட்களில் மீண்டும் அதிகளவிலானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

கொரோனா தொற்றில் இருந்து குணமடைவோர்களின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்து வருகிறது. ஆனால் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தாலும் அத்துடன் உடலில் பிரச்னை முடிவதில்லை என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

சுவாசிப்பதில் சிரமம், இதயத்தில் பாதிப்பு போன்ற மேலும் ஒருசில மோசமான விளைவுகளையும் உண்டாக்குகிறது என்று ஏற்கனவே மருத்துவர்கள் கூறியிருந்தனர். தற்போது, புதிதாக காது கேளாமையும் நிரந்தரமாக ஏற்படலாம் என்று லண்டன் பல்கலைக் கழகக் கல்லூரி ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

கொரோனா வந்தால் காதும் கேட்காது.. ஆய்வில் அதிர்ச்சி முடிவு !

இங்கிலாந்திலுள்ள ராயல் நேஷனல் மருத்துவமனையில் 45 வயதுள்ள ஒருவர் கொரோனா அறிகுறிகளுடன் அனுமதிக்கப்பட்டு இருந்தார். தொடர்ந்து 10 நாட்கள் சிகிச்சைக்குப் பிறகு அவருக்கு மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டது. இதனால், தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டு, செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வந்தது.

சிகிச்சையின்போதே இடது காதில் கேட்கும் திறன் பறிபோனது. தீவிர சிகிச்சைப் பிரிவிலிருந்து வெளியேறிய ஒரு வாரத்தில் வலது காதும் கேட்காமல் போனது. இதனால், நோயாளியின் காதுப் பகுதியை மருத்துவர்கள் முழுமையாக ஆய்வு செய்தனர்.

ஆனால், காதில் எவ்வித பாதிப்பும் இல்லாததால் அதிர்ச்சி அடைந்த மருத்துவர்கள் தொடர்ந்து பரிசோதனை மேற்கொண்டனர். அப்போது கொரோனா வைரஸ் காரணமாக கேட்கும்திறன் பறிபோயிருக்கலாம் என்று கண்டுகொண்டனர்.

இது குறித்து மருத்துவர்கள் கூறும்போது, கொரோனா பரவிய பிறகு கடந்த ஏப்ரல் மாதத்தில், கொரோனா நோயாளி ஒருவருக்கு காது கேளாமை ஏற்பட்டது. அப்போது, அதை யாரும் கவனத்தில் எடுத்துக் கொள்ளவில்லை. தற்போது மீண்டும் அதே பிரச்னை ஏற்பட்டுள்ளதை நேரடியாகக் கண்டுள்ளோம்.

கொரோனா வந்தால் காதும் கேட்காது.. ஆய்வில் அதிர்ச்சி முடிவு !

எனவே, கொரோனாவுக்கும் காது கேளாமைக்கும் இருக்கும் தொடர்பு பற்றி இனி நாம் சிந்திக்க வேண்டும். இதுதொடர்பாக கூடுதல் ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

newstm.in

Trending News

Latest News

You May Like