1. Home
  2. தமிழ்நாடு

உண்மையிலேயே தமிழக மீனவர்கள் மீது முதல்வருக்கு அக்கறை இருந்திருந்தால்... முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு எடப்பாடி பழனிசாமி கோரிக்கை..!

1

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி  வெளியிட்டுள்ள அறிக்கையில்,

தமிழகத்தை சேர்ந்த மீனவர்கள் 12 பேர் கடந்த மாதம் 22-ந்தேதி கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது மாலத்தீவு கடற்படையினரால் கைது செய்யப்பட்டதாகவும், அவர்களுக்கு 2 கோடியே 25 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாகவும், அதை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார். 

உண்மையில் தமிழக மீனவர்கள் மீது  முதல்வருக்கு அக்கறை இருந்திருந்தால் அபாரதத் தொகையை செலுத்தி மீனவர்களையும் அவர்களின் மீன்பிடி விசை படகுகளை மீட்டு தர வேண்டியதுதானே? முதல்வர் ஸ்டாலின், தமிழக மீனவர்கள் செலுத்த வேண்டிய அபராதத் தொகையை செலுத்த முன்வராதது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. தமிழக அப்பாவி மீனவர்களின் வாழ்வாதாரத்தை காக்க அபராதத் தொகையை செலுத்தும்படி அ.தி.மு.க.சார்பில் வலியுறுத்துகிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் அவர் தெரிவித்துள்ளார் 

Trending News

Latest News

You May Like