வாஸ்து சாஸ்திரப்படி குளியலறை சரியான திசையில் அமையாவிட்டால்...
நாம் குடியிருக்கும் வீட்டின் வாஸ்து அமைப்பு சிறிது பாதிப்படைந்தாலும், குடும்பத்தின் ஒட்டுமொத்த ஆரோக்கியமும், நிதி நிலைமையும் பாதிக்கப்பட்டுவிடும்.. அதனால்தான், வீட்டின் ஒவ்வொரு அறைகளுக்கும் வாஸ்து சாஸ்திரத்தில் பல்வேறு விஷயங்கள் சொல்லப்பட்டுள்ளன.
சில பொருட்களை குளியலறையில் வைக்கக்கூடாது என்பார்கள்.. குறிப்பாக சிலர் அழகுக்காக போட்டோக்களை பாத்ரூம் சுவற்றில் ஒட்டி வைத்திருப்பார்கள்.. இதில், கிழிந்த போட்டோக்களை மட்டும் குளியலறையில் வைக்கக்கூடாது. வீட்டில் குளியலறையின் கதவுக்கு முன்னால் கண்ணாடி வைக்கக் கூடாது என்கிறார்கள் வாஸ்து நிபுணர்கள்.
அதேபோல, உடைந்த கண்ணாடி, உடைந்த பக்கெட்கள், உடைந்த குழாய்கள், மங்கலான கண்ணாடி, அழுக்கு துணிகள், ஈரமான துணிகள் என இப்படி எதையுமே குளியலறையில் வைத்திருக்க கூடாது. இவைகளை வைத்திருந்தால் குடும்பத்தில் வறுமை பீடித்து கொள்வதுடன், ஆரோக்கியமும் பாதிக்கப்படும் என்கிறார்கள்..
குளியலறையில் உள்ள பொருட்களின் நிறம் குறித்தும் வாஸ்துவில் கூறப்பட்டுள்ளது. அந்தவகையில், சுவர்கள் நீல நிறத்தை பூசுவது மிகவும் சிறப்பு.. டைல்ஸ் பதிவதாக இருந்தாலும்சரி, அதுவும் நீல நிறத்திலேயே பதிந்து கொள்ளலாம். பக்கெட்டுகள், மக்குகள், போன்றவையும் நீலநிறத்தில் பயன்படுத்தலாம்..
அல்லது பச்சை கலர் பக்கெட்டுகளை வைத்திருக்கலாம்.. சனி மற்றும் ராகுவின் தோஷங்களில் இருந்து பாதுகாக்க, இந்த பச்சை நிறம் உதவும்.. அத்துடன் பச்சை நிறம் மங்களகரமானது என்பதால், குளியலறையில் பச்சை டைல்ஸ்களையும் பொருத்தலாம். ஆனால், எக்காரணம் கொண்டும் கருப்பு கலர் பக்கெட்டுகளை பாத்ரூமுக்குள் வைக்கக்கூடாதாம்..
அதேபோல, பாத்ரூம் டைல்ஸ் எந்த அளவுக்கு சுத்தமாக உள்ளதோ அந்த அளவுக்கு நிதி பற்றாக்குறை ஏற்படாது.. எனவே, டைல்ஸ்களில் அழுக்கு சேராமல் பார்த்து கொள்ள வேண்டும்.. தினமும் குளியலறை கழுவிவிடுவதால், பணத்தட்டுப்பாடு ஏற்படாமல் இருப்பதுடன், வீட்டில் ஆரோக்கியமும் பாதுகாக்கப்படும்.
பக்கெட்டுகளை காலியாக வைத்திருந்தாலும் பணத்தட்டுப்பாடு ஏற்படும். அதனால், வெற்று வாளிக்கு பதிலாக, அதில் நிரம்பியிருக்கும்படி பார்த்து கொள்ள வேண்டும். அதேபோல, எந்த திசை குளியலறையாக இருந்தாலும், அதன் கதவு மட்டும் வெளிப்புறமாக திறக்கும் வகையில் அமைக்கக்கூடாதாம்.. எனவே, வாஸ்து சாஸ்திரத்தில் கதவுகளும் மிக முக்கிய பங்கு வகிக்கின்றன.
வீட்டில் இடத்தை மிச்சப்படுத்த ஒரே இடத்தில் குளியலறை, கழிப்பறை கட்டினால், அதுவும் வாஸ்து தோஷத்திற்கு வழிவகுத்துவிடும்..மேலும் ஆரோக்கிய குறைபாடுகளும் ஏற்படும். எனவே, ஒரே இடத்தில் குளியலறை, கழிப்பறையை தவிர்க்க வேண்டும். ஒருவேளை இரண்டுமே ஒன்றாக இருக்க வேண்டும்படி நேர்ந்துவிட்டால், இரண்டிற்கும் இடையே ஸ்கிரீன் போட வேண்டும்.
அதேபோல, குளியலறையில் படிகாரம் வைப்பது வாஸ்து குறைபாட்டை போக்க உதவும்.. இதனால் பூச்சிகளின் நடமாட்டமும் இருக்காது.. ஆனால், இந்த படிகாரத்தை யாரும் பார்க்காத இடத்தில் வைக்க வேண்டும். படிகாரம் வீட்டிற்குள் மகிழ்ச்சி மற்றும் அமைதி, செல்வத்தை பெருக்கக்கூடியது. குளியலறை என்றில்லை, தூங்கும் முன்பு, கறுப்பு துணியில் படிகாரத்தை கட்டி தலையணைக்கு அடியில் வைத்து தூங்கினால் கெட்ட கனவுகள் வராது.. இனம்புரியாத பயத்திலிருந்தும் விடுபடலாம்..
அதேபோல, 50 கிராம் படிகாரத்தை வீடு அல்லது உங்களது சொந்த அலுவலகத்தின் ஒவ்வொரு அறையிலும் அல்லது மூலையிலும் வைக்கலாம்.. இதனால், திருஷ்டிகள், தீய சக்திகள் விலகி பண ஆதாயத்திற்கு வழிபிறக்கும்.. வீடு, அலுவலகத்தை கழுவி துடைப்பதாக இருந்தால், அந்த தண்ணீரில் படிகாரத்தை சேர்த்து கொள்ளலாம்.. குளிக்கும் நீரிலும் படிகாரத்தை சேர்ப்பதால், உங்கள் மீதான திருஷ்டி விலகும்.
.png)