1. Home
  2. தமிழ்நாடு

எங்கள் கட்சி ஆட்சி அமைந்தால் யாரும் மாநிலத்தை விட்டு வெளியே போக வேண்டிய அவசியம் இருக்காது - பிரசாந்த் கிஷோர்..!

1

தேர்தல் வெற்றி வியூக மன்னனாக கருதப்படும் பிரசாந்த் கிஷோர் ஜன் சுராஜ் என்ற பெயரில் தனி கட்சி துவக்கி உள்ளார். வரும் 2025 -ல் நடைபெற உள்ள மாநில சட்டசபை தேர்தலில் போட்டியிட முடிவு செய்துள்ளார்.

இதனிடையே பாட்னா நகரில் நடைபெற்ற பெண்கள் மாநாட்டில் வரும் தேர்தலில் மொத்தம் உள்ள 243 இடங்களிலும் வேட்பாளர்கள் போட்டியிடுவர். இதில் 40 தொகுதிகள் வரையில் பெண்கள் நிறுத்தப்படுவர் என கூறினார் .மேலும் வரும் 2025-ல் மாநில தேர்தலில் தங்களின் கட்சி ஆட்சி அமைந்தால் யாரும் மாநிலத்தை விட்டு வெளியே போக வேண்டிய அவசியம் இருக்காது என பிரசாந்த் கிஷோர் தெரிவித்து உள்ளார்.

பெண்களின் முன்னேற்றத்திற்காக மாநிலத்தில் செயல்பட்டு வரும் ஜீவிகா திதிஸ் என்ற நிதி உதவி அமைப்பிடம் பெறப்படும் வட்டியை விட குறைவான கட்டணத்தில் நிதி உதவி வழங்கப்படும்.

பெண்களுக்கு பொருளாதார சுதந்திரம் கிடைக்காத வரையில், அவர்களுக்கு அரசாங்கத்தில் சமமான பங்கேற்பு என்பது சாத்தியமில்லை .ஜன் சூராஜ் அரசு அமைந்ததும், பீகாரில் இருந்து யாரும் வெளியேற வேண்டிய கட்டாயம் இல்லை. இதற்காக 10,000 முதல் 12,000 வேலைகள் வரை உள்ள விரிவான திட்டத்தை நாங்கள் தயார் செய்துள்ளோம்.

வரும் 2025 சட்டசபை தேர்தலில் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்த 75 பேர் களமிறக்கப்படுவர் என அவர் கூறினார்.

Trending News

Latest News

You May Like