1. Home
  2. தமிழ்நாடு

பிரதமரை சந்திக்க ஓ.பன்னீர்செல்வம் என்னிடம் கேட்டிருந்தா... - நயினார் நாகேந்திரன் பதில்!

1

தமிழகத்திற்கு வருகை தந்த பிரதமர் மோடியை சந்திக்க விருப்பம் தெரிவித்து ஓபிஎஸ் வெளிப்படையாகவே கடிதம் அனுப்பினார்.ஆனால் திருச்சி விமான நிலையத்தில் எடப்பாடி பழனிசாமியின் வரவேற்பை பிரதமர் மோடி ஏற்றார். ஆனால், ஓபிஎஸ்ஸுக்கு வரவேற்பு அளிக்கக் கூட பிரதமர் அலுவலகம் அனுமதி வழங்கவில்லை என்பதால் அவருடைய ஆதரவாளர்கள் கடும் அதிருப்தி அடைந்தனர். குறிப்பாக பண்ரூட்டி ராமச்சந்திரன், ஓபிஎஸ் பாஜகவை விட்டுவிட வேண்டும் என்றும், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து ஓபிஎஸ் வெளியேற வேண்டும் என வெளிப்படையாக கருத்து தெரிவித்தார்.

இந்த நிலையில் சங்கரன் கோவிலில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் , “பிரதமரை சந்திக்க ஓபிஎஸ் அனுமதி கேட்டது குறித்து எனக்கு எதுவும் தெரியாது. குறிப்பாக அவர்கள் சந்திக்க அனுமதி கேட்டார்களா இல்லையா என்பது கூட எனக்குத் தெரியாது. எனக்கு தெரிந்திருந்தால் நிச்சயம் பிரதமரை சந்திக்க அவருக்கு நேரம் வாங்கித் தந்திருப்பேன்” என்று பதில் அளித்தார்.

முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, “பிரதமரை சந்திக்க ஓ.பன்னீர்செல்வம் நேரம் கேட்டிருந்தாரா என்பது குறித்து எனக்குத் தெரியாது. நாங்கள் அனைவருமே சாதாரண தொண்டர்கள் தான். யார் மீது அவர் அன்பை காட்டினாலும் அது தொண்டர்களுக்கு தான். அத பத்தி எனக்கு தெரியாது” என்றும் கருத்து தெரிவித்தார்.

Trending News

Latest News

You May Like