1. Home
  2. தமிழ்நாடு

பா.ஜ., மட்டும் இல்லையென்றால் அதிமுக எதிர்க்கட்சியாக கூட இருந்திருக்க முடியாது - எல்.முருகன்..!

1

அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலையை கடுமையாக விமர்சித்திருந்தார். அவர் கூறுகையில், ”முளைத்து மூன்று இலை கூட விடவில்லை. அதற்குள் இரட்டை இலையைப் பற்றி அண்ணாமலை பேசுகிறார். அதிமுக போட்ட பிச்சையில் சட்டசபையில் 4 பா.ஜ., எம்எல்ஏ.,க்கள் உள்ளனர். 2026ல் தனியாக நின்று ஒரு சீட் ஜெயித்து பாருங்கள்” என சவால் விடுத்திருந்தார்.

இது பற்றி மத்திய இணையமைச்சர் எல்.முருகன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: பா.ஜ., மட்டும் இல்லையென்றால் அதிமுக எதிர்க்கட்சியாக கூட இருந்திருக்க முடியாது. பா.ஜ., ஓட்டுகளை மாநிலம் முழுவதும் அதிமுக வாங்கியுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Trending News

Latest News

You May Like