1. Home
  2. தமிழ்நாடு

பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக பதவியேற்றால்... மல்லிகார்ஜுன கார்கே எச்சரிக்கை..!

1

ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் காங்கிரஸ் பேரணியில் மல்லிகார்ஜுன கார்கே உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது –

"மக்களவைத் தேர்தலில் மோடி ஆட்சிக்கு வந்தால், சர்வாதிகாரம் வந்துவிடும். ஜனநாயகமும் இல்லை, தேர்தலும் இல்லை.

அமலாக்கத்துறை ஒவ்வொருவருக்கும் நோட்டீஸ் அனுப்பி வருகிறது. மக்களை அவர்கள் அச்சுறுத்துகிறார்கள். அச்சத்தின் காரணமாக சிலர் நட்பை விட்டுவிட்டு செல்கின்றனர், சிலர் கட்சியை விட்டு வெளியேறுகின்றனர். மேலும் சிலர் கூட்டணியை விட்டு வெளியேறுகின்றனர். இதுவே வாக்களிக்க கடைசி வாய்ப்பு. இதற்கு பிறகு வாக்களிக்கும் வாய்ப்பெல்லாம் இல்லை.

ராகுல் காந்தி நாட்டை ஒருமைப்படுத்த விரும்புகிறார். ‘அன்பின் கடை’-யைத் திறந்திருப்பதாக ராகுல் காந்தி கூறினார். ஆனால் பாஜகவும் ஆர்எஸ்எஸ்-ம் வெறுப்பின் கடையை திறந்துள்ளன. அதனால் நாம் எப்போதும் உசாராக இருக்க வேண்டும். பாஜகவும், ஆர்எஸ்எஸ்-ம் விசம். அவர்கள் நமது உரிமைகளை பறிக்கிறார்கள்.

நரேந்திர மோடியுடனான நட்பால் நவீன் பட்நாயக் என்ன பலன் பெற்றார்? இரட்டை என்ஜின்கள் ஒரே நேரத்தில் பழுதாகி விட்டன. மகாகட்பந்தனில் இருந்து ஒருவர் விலகியதால் நம்மை அது பலவீனப்படுத்தி விடாது. நாம் பாஜக-வை வீழ்த்துவோம்", இவ்வாறு அவர் கூறினார்.

பாஜகவை வீழ்த்த வேண்டும் என்ற ஒற்றை நோக்கத்தில் உருவான இண்டியா (ஐ.என்.டி.ஐ.ஏ) கூட்டணியில் தற்போது பிளவு ஏற்பட்டு உள்ளது. மாநிலத்தில் தனித்து போட்டியிட்டாலும் தேசிய அளவில் கூட்டணியில் இருப்பதாக திரிணாமூல் காங்கிரஸ் கூறியுள்ள நிலையில், பீகார் முதல்வர் நிதிஷ் குமார் கூட்டணியில் இருந்து வெளியேறி பாஜகவோடு கூட்டணி வைத்து ஆட்சி அமைத்து விட்டார்.

Share:

Trending News

Latest News

You May Like