1. Home
  2. தமிழ்நாடு

வேலை செய்யும் பெண்களுக்கு மாதவிடாய் விடுப்புகளை கட்டாயமாக்கினால்... சுப்ரீம் கோர்ட்

1

பணியிடங்களில், வேலை செய்யும் பெண்களுக்கு மாதவிடாய் கால விடுப்பு குறித்து தொடரப்பட்ட மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட், இது அரசின் கொள்கை முடிவு சார்ந்த விவகாரம் என்பதால் இதில் தலையிட விரும்பவில்லை. பெண்கள், குழந்தைகள் நலத்துறை அமைச்சகத்தை நாடி கோரிக்கைகளை வைக்கலாம் என்று அறிவுறுத்தியிருக்கிறது.

முன்னதாக, மாதவிடாய் காலத்தில் வேலை செய்யும், பெண்களுக்கு விடுப்பு வழங்குவதை கட்டாயமாக்கினால், பணியிடங்களில் அவர்களை ஒதுக்கிட வழிவகுத்துவிடும். பெண்களை பாதுகாக்க எடுக்கும் முயற்சிகள் அவர்களுக்கு பாதகமாக அமைய வாய்ப்புள்ளது என்று மாதவிடாய் கால விடுப்பு தொடர்பான வழக்கில் சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி சந்திரசூட் கருத்துத் தெரிவித்துள்ளார்.

மாதவிடாய் காலங்களில் பெண்களுக்கு விடுப்பு வழங்க வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்க உத்தரவிடக் கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது, மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட், மாதவிடாய் விடுப்பு என்பது மத்திய அரசின் விவகாரம். எனவே சம்பந்தப்பட்ட மனுதாரர், பெண்கள், குழந்தைகள் நலத்துறை அமைச்சகத்தை நாடி கோரிக்கை வைக்கலாம் என்று நீதிபதி அறிவுறுத்தியிருக்கிறார்.

Trending News

Latest News

You May Like