1. Home
  2. தமிழ்நாடு

இந்தியா அதிக வரி விதித்தால் நாங்களும் பரஸ்பர வரி விதிப்போம் - டொனால்டு டிரம்ப்..!

1

அமெரிக்காவில் நடந்த அதிபர் தேர்தலில், டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்றார். அவர் வரும் 2025ம் ஆண்டு ஜனவரி 20ம் தேதி அமெரிக்கா அதிபராகப் பொறுப்பு ஏற்க உள்ளார். இந்தச் சூழலில், அவர் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். சமீபத்தில், அமெரிக்காவில் 1 பில்லியன் டாலர்களுக்கு அதிகமாக முதலீடு செய்யும் முதலீட்டாளர்களுக்கு அனைத்து அனுமதிகளும் எளிதில் கிடைக்கும் என டிரம்ப் அறிவித்து இருந்தார்.

இந்நிலையில், “எங்களுக்கு வரி விதித்தால், நாங்களும் வரி விதிப்போம்” என அமெரிக்கா அதிபராகத் தேர்வு செய்யப்பட்டுள்ள டொனால்டு டிரம்ப் எச்சரித்துள்ளார்.

இதுகுறித்து மாநாட்டில் டிரம்ப் பேசியது,

சில அமெரிக்கா பொருட்களுக்கு இறக்குமதி வரி அதிகம் விதிக்கப்படுகிறது. அதிக வரி விதிக்கும் நாடுகளில் அமெரிக்காவும், பிரேசிலும் இருக்கிறது. அதிக வரி விதித்தால், நாங்களும் வரி விதிப்போம்.

எல்லா சூழ்நிலைகளிலும் அவர்கள் எங்களுக்கு வரி விதிக்கிறார்கள். நாங்கள் அவர்களுக்கு ஒரு சைக்கிளை அனுப்புகிறோம். எங்களிடம் ரூ. 100 முதல் ரூ.200 வரை வசூலிக்கிறார்கள். இந்தியா நிறைய கட்டணம் வசூலிக்கிறது. தொடர்ந்து அதிக வரி விதித்தால் நாங்களும் இந்தியாவுக்கு பரஸ்பர வரி (reciprocal tariffs) விதிப்போம். இவ்வாறு டொனால்டு டிரம்ப் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

Trending News

Latest News

You May Like