1. Home
  2. தமிழ்நாடு

பணத்தை கட்டவில்லை என்றால் புகைப்படத்தை ஆபாசமாக வெளியிடுவேன் : கடன் செயலியால் மீண்டும் ஒரு தற்கொலை..!

1

தூத்துக்குடி பால்பாண்டி நகர் 2வது தெருவைச் சேர்ந்தவர்  மது கார்த்திகேயன். இவர்  தனியார் ஷிப்பிங் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி காவிய சுதா (22), கடன் செயலி மூலம் ரூ.1லட்சம் கடன் வாங்கி இருக்கிறார். அதில் ரூ.50ஆயிரம் பணத்தை கட்டியுள்ளார். 

கடந்த 2 மாதங்களாக தவனை கட்டவில்லை என்பதால், கடன் செயலியில் இருந்து பேசுவதாக கூறிய மர்ம நபர் பணத்தை கட்டவில்லை என்றால் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து ஆன்லைனில் வெளியிடுவேன் என்று மிரட்டியிருக்கிறாராம். இதனால் மனமுடைந்த காவிய சுதா தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.


இந்த சம்பவம் குறித்து சிப்காட் காவல் நிலையத்தில் தூத்துக்குடி ரூரல் டிஎஸ்பி ராஜா சுந்தர், வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார். கடன் செயலி மூலம் மிரட்டிய நபரை போலீசார் தேடி வருகின்றனர். மேலும் திருமணமான 2 மாதத்தில் அவர் உயிரிழந்துள்ளதால் சம்பவம் குறித்து தூத்துக்குடி கோட்டாட்சியர் மேல் விசாரணை நடத்தி வருகிறார்.

Trending News

Latest News

You May Like