1. Home
  2. தமிழ்நாடு

தமிழகத்தில் இதை செய்தால் அவன் கதை முடிந்து போய்விட்டது என்ற பயத்தை போலீசார் உருவாக்க வேண்டும் - அன்புமணி..!

Q

சென்னையில் பாலியல் வழக்கில் சீமானிடம் விசாரணை குறித்து நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு, அன்புமணி அளித்த பதில்: அதாவது போலீசார் சட்டம் ஒழுங்கை பாதுகாப்பது, கஞ்சாவை ஒழிப்பது, கள்ளச்சாராயத்தை ஒழிப்பது உள்ளிட்ட தனது வேலைகளில் கவனம் செலுத்தவில்லை. அவர்கள் தனது வேலையை விட்டுவிட்டு, அரசியல் கட்சி தலைவர்களை துன்புறுத்துவது, பொய் வழக்குகள் போடுவது உள்ளிட்டவற்றில் கவனம் செலுத்தி கொண்டு இருக்கிறார்கள்.
தமிழகத்தில் கடந்த மாதத்தில் மட்டும், எத்தனையோ பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி உள்ளனர். இது குறித்து போலீசார், அவர்கள் தனிப்பட்ட விஷயம் என சொல்வது அசிங்கமாக இருக்கிறது. தமிழகத்தில், இதை யாராவது செய்தால் அவன் கதை முடிந்து போய்விட்டது என்ற பயத்தை போலீசார் உருவாக்க வேண்டும்.
நாங்கள் விவசாயிகள் பக்கம் இருக்கிறோம். விவசாயிகள் மட்டும் பாவப்பட்ட மக்களா? வேளாண் துறைக்கு பட்ஜெட்டில் ரூ.65,000 கோடி ஒதுக்கலாம். நெல்லுக்கு ரூ.3500, கரும்புக்கு ரூ.5 ஆயிரம் கொள்முதல் விலை நிர்ணயிக்கலாம். நியாயவிலை கடைகளில் நாட்டுச் சர்க்கரை விநியோகிக்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.

Trending News

Latest News

You May Like