தேர்தல் பணிகளில் மாவட்டச் செயலாளர்கள் தலையீடு இருந்தால்... பொறுப்பாளர்களுக்கு எடப்பாடி பழனிசாமி அறிவுரை!

அ.தி.மு.க.வின் 52-வது ஆண்டு தொடக்கவிழாவையொட்டி, கட்சி நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார். அப்போது, பூத் கமிட்டி பொறுப்பாளர்களுடன் பேசிய அவர் மாவட்டச் செயலாளர்களுக்கு அஞ்சி அவர்கள் சொல்படி நடத்தப்பதை விட்டு, கட்சிக்காகத் தேர்தல் பணிகளைத் தீவிரப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
தேர்தல் பொறுப்பாளர் பணிகளையும் கட்சியின் தலைமை நிர்வாகிகள் கண்காணிப்பார்கள் என்றும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். மேலும், பா.ஜ.க. உடன் கூட்டணி இல்லை என்பதை அழுத்தம் திருத்தமாக மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும் என் அ.தி.மு.க.வினருக்கு எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தியுள்ளார்.
முன்னதாக, கட்சியின் தலைமை அலுவலகத்தில் உள்ள ஜெயலலிதா மற்றும் எம்ஜிஆர் ஆகியோருக்கு எடப்பாடி பழனிசாமி மாலை அணிவித்து மரியாதைச் செலுத்தினார்.