பாஜக மீணடும் ஆட்சிக்கு வந்தால் சிலிண்டரின் விலை 2000ஆக உயரும் : சீமான்..!

தாராபுரத்தில் திருப்பூர் கிழக்கு மாவட்ட நாம் தமிழர் கட்சியின் சட்டமன்றத்தொகுதி பொறுப்பாளர்களின் கலந்தாய்வு கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் கூறியதாவது :சமையல் எரிவாயு சிலிண்டருக்கு இருநூறு ரூபாய் விலை குறைத்து இருப்பதாக அறிவித்துள்ளது ஒன்றிய அரசு. இதை ஏன் முன் கூட்டியே செய்திருக்க கூடாது?? என கேள்வி எழுப்பினார்.
நாடாளுமன்ற தேர்தல் வரவிருப்பதே இந்த விலை குறைப்பின் கரணம் என்றும் கூறினார்.தேர்தல் முடிந்ததும் மீணடும் பாஜக அரசு ஆட்சிக்கு வந்தால் சிலிண்டரின் விலை 2000ஆக உயந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை ,என்றும் கூறினார். சிலிண்டர் விலையை குறைத்தது போல டோல்கேட் கட்டணத்தையும் குறைத்து வசூல் செய்யலாமே!!என்றும் அவர் குற்றம் சாட்டினார்.
ஒவ்வொரு தேர்தலிலும் இதுதான் நடக்கிறது.” அவர்கள் ஏமாற்றுகிறார்கள்,நீங்கள் ஏமாறுகிறீர்கள்” என்றும் கூறினார்.