1. Home
  2. தமிழ்நாடு

ஒரு மத்திய அமைச்சரே இப்படி அவமானப்படுத்தப்பட்டால் சாதாரண மக்களின் நிலை என்ன : அண்ணாமலை கேள்வி..!

Q

டி.ஜி.பி.,க்கு அனுப்பிய கடிதத்தில் தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை கூறியுள்ளதாவது: மத்திய அமைச்சர் முருகன் கடந்த 17 ம் தேதி திருப்பரங்குன்றம் வந்த போது அவரது பாதுகாவலர்களை போலீசார் தவறாக யைாண்டதுடன், அவரை கோவிலுக்குள் நுழைவதை தடுக்கவும் முயற்சி செய்தனர். திருப்பரங்குன்றம் கோவில் மற்றும் மலை மேல் உள்ள காசி விஸ்வநாதர் கோவில் ஆகிய இரண்டிற்கும் வர மத்திய அமைச்சர் போலீசிடம் முன்கூட்டியே அனுமதி பெற்றிருந்தார். இருந்த போதும், கோவில் வாசலில் அவரை போலீசார் மோசமாக கையாண்டது வருத்தம் அளிக்கிறது.

 

அனுமதி பெற்றும் தன்னை கோயிலுக்குள் நுழைய அனுமதி மறுத்ததற்கு என்ன காரணம் என மத்திய அமைச்சர் முருகன் கேள்வி எழுப்பினார். அதற்கு, கோவிலுக்கு செல்ல அனுமதிக்கக்கூடாது என உயர் அதிகாரிகளிடம் இருந்து உத்தரவு வந்ததாக போலீசார் கூறியது இன்னும் வருத்தம் அளிக்கிறது.

 

ஒரு எம்.பி.,யின் பாதுகாப்பு ஆபத்தில் உள்ள ஒரு கட்டத்தில், அவர் விரும்பும் இடத்தில் வழிபடும் உரிமையை போலீசார் அப்பட்டமாக தவறாக பயன்படுத்தி உள்ளனர். இது பொது மக்கள் இடையே கடுமையான சந்தேகத்தை எழுப்புகிறது. சமீப நாட்களில் தமிழகத்தில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு குற்றச் சம்பவங்கள் நிகழ்ந்து வருகின்றன.

சமீப நாட்களாக தமிழகத்தில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு குற்றச் சம்பவங்கள் அதிகரித்து வருவதால், பீதியடைந்துள்ள பொது மக்கள் இடையே, போலீசாரின் இந்த நடவடிக்கை மேலும் சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. ஒரு எம்.பி.,யும், மத்திய அமைச்சரே இப்படி அவமானப்படுத்தப்பட்டால், சாதாரண மக்களின் நிலை என்ன என கேள்வி எழுப்பி உள்ளார். இவ்வாறு அந்த கடிதத்தில் கூறியுள்ளார்.

Trending News

Latest News

You May Like