1. Home
  2. தமிழ்நாடு

ஒருவர் தினமும் 1 மணி நேரம் வேலை செய்து ஒரு நாளைக்கு ரூ.33 ஆயிரம் சம்பளம் வாங்குகிறார் என்று சொன்னால் நம்ப முடிகிறாதா?

1

வருடத்திற்கு 365 நாளும் வேலைக்கு சென்றாலும் நம்மால் சில லட்சங்கள் தான் சம்பாதிக்க முடிகிறது. ஆனால், ஒருவர் தினமும் ஒரு மணி நேரம் மட்டுமே வேலை செய்து வருடத்திற்கு கிட்டத்தட்ட 1.2 கோடி ரூபாய் சம்பளம் வாங்குகிறார் என்று சொன்னால் நம்ப முடிகிறாதா? ஆம் அது உண்மைதான். ஒரு மணி நேரம் மட்டுமே வேலை செய்பவருக்கு கோடியில் சம்பளம் வழங்கும் நிறுவனம்தான் நாம் அனைவரும் அறிந்த கூகுள் நிறுவனம்.

உலகில் தேடுபொறி என்று சொன்னாலே அனைவருக்கும் நினைவில் வருவது கூகுள் குரோமைத்தான். அந்த அளவிற்கு பயனாளர்கள் கூகுளில் எதை தேடினாலும் அதற்கு பதில் கிடைத்துவிடும். அதுமட்டுமல்லாமல், உலக அளவில் அதிகபடியான மக்கள் பயன்படுத்தும் ஃபேஸ்புக், வாட்ஸ் அப் ஆகியவை கூகுள் நிறுவத்தின் அங்கமாக உள்ளது. இதுபோன்று ஒட்டுமொத்த இணையவாசிகளின் புகலிடமா கூகுள் நிறுவனம் உள்ளது.

கூகுள் நிறுவனத்தின் இந்த சிறப்பு எளிதில் கிடைத்துவிடவில்லை. இதற்காக கூகுள் நிறுவனம் சிறந்த மென்பொருளாளரை தேடி தேடி கண்டுபிடித்து பணியமர்த்தியுள்ளது. அப்படி தேடி கண்டுபிடித்த ஒரு மென்பொருளாளர் தான் டெவோன். இவர் ஒருவருக்கு மட்டும் கூகுள் நிறுவனம் ஆண்டுக்கு 1.5 லட்சம் அமெரிக்க டாலர் இந்திய மதிப்பில் கிட்டத்தட்ட 1கோடியே 20 லட்சம் ரூபாயை சம்பளமாக வழங்கி வருகிறது. ஆனால், இவ்வளவு சம்பளம் வாங்கும் டெவோன் நாள் முழுவதும் வேலை செய்பவர் இல்லை. நாளொன்றுக்கு ஒரு மணி நேரம் மட்டுமே வேலை செய்வார். இந்த ஒரு மணி நேரத்திற்கு மட்டும் இவர் சுமார் 33ஆயிரம் ரூபாய் சம்பாதிக்கிறார்.

இதுகுறித்து டெவோன் கூறுகையில், நான் கூகுள் நிறுவனத்தில் மென்பொறியாளராக பணியாற்றி வருகிறேன். என்னுடைய வேலை கணினி குறியீடு(கோடிங்) எழுதுவதுதான். நான் காலையில் அல்லது மாலையில்தான் பணியில் அமருவேன். ஆனால், அன்று முடிக்க வேண்டிய வேலையை 1 மணி நேரத்தில் முடித்து விடுவேன். கடுமையாக வேலை செய்வதை விட திறமையாக வேலை செய்து அந்த வேலையை எளிதில் முடித்து விடுவேன் என்று தெரிவித்தார்.

Trending News

Latest News

You May Like