நாம் தமிழர் வேதாரண்யம் தொகுதி வேட்பாளராக இடும்பாவனம் கார்த்திக் அறிவிப்பு..!

2026 சட்டசபை தேர்தலில் வேதாரண்யம் தொகுதியின் நாம் தமிழர் வேட்பாளராக இடும்பாவனம் கார்த்திக் அறிவிக்கப்பட்டுள்ளார். இந்த தகவலை அக்கட்சியின் தகவல் தொழில்நுட்ப பிரிவின் தலைவர் சுனந்தா தாமரைச் செல்வன் தமது சமூக வலை தள எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
அதில் வேதாரண்யம் சட்டசபை தொகுதியின் வேட்பாளர் அறிமுக கலந்தாய்வுக் கூட்டம் நாளை (ஏப்.6) வேதாரண்யத்தில் நடக்க உள்ளது. வேட்பாளர் பெயர் இடும்பாவனம் கார்த்திக் என்றும் குறிப்பிடப்பட்டு உள்ளது.
வேதாரண்யம் நாம் தமிழர் வேட்பாளர் இடும்பாவனம் கார்த்திக் தான் என்ற விவரம் அறிந்த கட்சியினர் அவருக்கு வாழ்த்துகளை கூறி வருகின்றனர். இந்த தொகுதியின் தற்போதைய எம்.எல்.ஏ.,வாக இருப்பவர் அ.தி.மு.க., மாஜி அமைச்சர் ஓ.எஸ்.மணியன் என்பது குறிப்பிடத்தக்கது.