மதி இழந்தவர், ராகுல்" ; மோடி கடும் தாக்கு..!
தேர்தலை முன்னிட்டு நாடு முழுவதும் நியாய யாத்திரை மேற்கொண்டு வரும் ராகுல் காந்தி மூன்று நாட்களுக்கு முன்பாக வாரணாசி வழியாக சென்றார்.
ராகுல் காந்தி குடும்பத்தினர் வழக்கமாக போட்டியிடும் அமைதி தொகுதியில் கடந்த 2019 ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில் பாஜகவின் ஸ்மிருதி இரானியிடம் ராகுல் தோல்வி அடைந்தார்.
அமேதியில் பேசிய ராகுல் எனது வாரணாசி பயணத்தின் போது மக்கள் "குடிபோதையில் சாலையில் படுத்திருந்ததை பார்த்தேன். உத்தர பிரதேசத்தின் இளைஞர்கள் தற்போது மதுவுக்கு அடிமையாகி விட்டனர்.
ராமர் கோவிலில் பிரதமர் மோடி அம்பானி அதானி போன்ற வசதி படைத்தவர்கள் தான் வருகை தருகிறார்கள். ஆனால் இளைஞர்கள் ஆகிய உங்கள் நிலைமை சாலையில் விழுந்து கிடக்க வேண்டிய அளவுக்குத்தான் உள்ளது" எனக் கூறியிருந்தார்.
இதற்கு பதிலடி கொடுத்த பிரதமர் மோடி, ராகுல் காந்தியை மிகக் கடுமையான வார்த்தைகளால் விமர்சித்து இருந்தார். அதாவது, ராகுலை "மதி இழந்தவர்" எனக் குறிப்பிட்டு, "அவர் எனது காசியின் (வாரணாசி) குழந்தைகளை குடிகாரர்கள் என அழைக்கிறார்" என்று சாடி இருந்தார்.
வாரணாசியில் நேற்று நடந்த நடந்த பொதுக் கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, "வயநாடு காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியின் பெயரைக் கூறிப்பிடாமல், “காங்கிரஸின் அரச குடும்பத்தைச் சேர்ந்த இளவரசர், வாரணாசி மக்களை அதன் சொந்த மண்ணில் வைத்து அவமானப் படுத்தியுள்ளார். என்ன வகையான மொழி அது?
தொடர்ச்சியாக என்னை துஷ்பிரயோகம் செய்தவர்கள், இப்போது உத்தரப் பிரதேச இளைஞர்கள் மீது அவர்களின் விரக்தியை வெளிப்படுத்துகின்றனர். உத்தரப் பிரதேச இளைஞர்களுக்கு "இண்டியா" கூட்டணித் தலைவர்கள் ஏற்படுத்திய அவமானத்தை என்னால் ஒருபோதும் மறக்கமுடியாது.
ஒவ்வொரு தேர்தலின்போதும் எதிர்க்கட்சிகள் ஒன்றாக கூடுவது வழக்கம். இறுதியில் முடிவு பூஜ்ஜியமாக வந்ததும், அவர்கள் பிரிந்து ஒருவர் மற்றவரை துஷ்பிரயோகம் செய்யவார்கள். இந்த முறையும் ஒட்டுமொத்த இந்தியாவின் எண்ணமும் மோடி உத்தரவாதத்துக்கு ஆதரவாக உள்ளது” என்று பிரதமர் மோடி பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.
“மதி இழந்தவர்" என்று தன்னை பிரதமர் மோடி கடுமையாக சாடிய நிலையில், அதே பாணியில் பதிலடி கொடுத்திருக்கிறார், ராகுல் காந்தி .
இது தொடர்பாக ராகுல் காந்தி தனது "எக்ஸ்" சமூகவலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ள பதிவில், “லக்னோவில் இருந்து பிரயாக்ராஜ் வரை இளைஞர்கள் வீதிகளில் இறங்கி காவலர் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரத்துக்காக கோஷம் எழுப்பி வருகின்றனர்.
ஆனால் அங்கிருந்து 100 கிமீ தொலைவில் வாரணாசியில் இருக்கும் பிரதமர் இளைஞர்களை தவறாக வழிநடத்திக் கொண்டிருக்கிறார்.
இது எப்படி இருக்கிறது தெரியுமா? "பாட்டியிடம் சென்று அவர் தாய் வீட்டுப் பெருமையை கதையாக சொல்வதுபோல் இருக்கிறது” என்று கிண்டல் செய்துள்ளார்.
அவரது இந்த பதிவுக்கு (டுவீட்) கீழ் காரசார விவாதங்கள் நடந்து வருகின்றன. அந்த பதிவுடன் ராகுல் உ.பி. இளைஞர்களின் போராட்ட வீடியோ ஒன்றையும் இணைத்துள்ளார்.