1. Home
  2. தமிழ்நாடு

மக்களுக்கு ஐசிஎம்ஆர் எச்சரிக்கை..! சமையல் எண்ணெய்யை மீண்டும், மீண்டும் சூடாக்கினால் ஆபத்து..!

1

 தினமும் சமையலுக்கு பயன்படுத்தப்படும் அத்தியாவசிய பொருட்களில் முக்கியமானது சமையல் எண்ணெய். பலரும்  சமையல் எண்ணெயை மீண்டும் மீண்டும் சூடாக்கி அதையே சமையலுக்கு பயன்படுத்தி வருகின்றனர்.ஆனால் எண்ணெயை மீண்டும் மீண்டும் சூடாக்கி சமையலுக்கு பயன்படுத்துவது இதயம் மற்றும் புற்றுநோயை ஏற்படுத்தலாம் என  ஐ.சி.எம்.ஆர் எச்சரிக்கை விடுத்துள்ளது. 

ICMR மற்றும் தேசிய ஊட்டச்சத்து நிறுவனம் இணைந்து, இந்தியர்களிடையே ஆரோக்கியத்தைப் பேணுவதற்கும் ஊட்டச்சத்துக் குறைபாட்டைத் தடுப்பதற்கும் ஏற்ற உணவுப் பழக்கங்களை கடைபிடிக்க வலியுறுத்தி புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், சமயல் எண்ணெய்கள் அல்லது கொழுப்பு நிறைந்த எண்ணெய்களை மீண்டும் மீண்டும் சூடாக்கி பயன்படுத்துவது குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளது.

வெஜிடபிள் எண்ணெய்யை மீண்டும் மீண்டும் சூடாக்கும்போது அதில் நச்சு கலவைகள் மற்றும் ட்ரான்ஸ் கொழுப்புகள் உருவாகிறது.இது இதய நோய்கள் மற்றும் புற்றுநோயின் அபாயத்தை அதிகரிக்கும் வாய்ப்புள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. உணவகங்களிலும் வீடுகளிலும் வெஜிடபிள் எண்ணெய்யை சூடாக்கி பயன்படுத்துவது சாதாரணமாக நிகழ்ந்து வருகிறது. இதை சுட்டிக்காட்டியே ICMR இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது. வெஜிடபிள் எண்ணெய்யை 1 அல்லது 2 நாட்களுக்கு மட்டுமே பயன்படுத்துவதே பாதுக்காப்பானதாகும். அதற்கு மேல் அதை சேமித்து வைத்துப் பயன்படுத்துவது ஆபத்திலேயே முடியும் என்று மருத்துவ வல்லுனர்களும் தெரிவிக்கின்றனர்.

Trending News

Latest News

You May Like