1. Home
  2. தமிழ்நாடு

2025 சாம்பியன்ஸ் டிராபி – பரிசுத் தொகையை அறிவித்த ஐ.சி.சி.!

Q

2025-ஆம் ஆண்டுக்கான சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கான பரிசுத் தொகையை அறிவித்துள்ளது ஐ.சி.சி.

மார்ச் 9-ம் தேதி நடைபெறும் இறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணிக்கு 2.24 மில்லியன் டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 19.45 கோடி வழங்கப்படும் என ஐ.சி.சி. தெரிவித்துள்ளது.

இரண்டாம் இடம் பிடிக்கும் அணிக்கு 1.12 மில்லியன் டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 9.72 கோடி வழங்கப்படும். அரையிறுதி சுற்றில் தோல்வியடைக்கும் ஒவ்வொரு அணிக்கும் 5.6 லட்சம் அமெரிக்க டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 4.86 கோடி வழங்கப்படும். இதன் மூலம், சாம்பியன்ஸ் கோப்பை தொடரின் மொத்த பரிசுத் தொகை 6.9 மில்லியன் டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 60 கோடி ஆகும்.

க்ரூப் சுற்று போட்டிகளில் ஒவ்வொரு வெற்றிக்கு (ஒரு போட்டி) 34 ஆயிரம் டாலர்கள் வழங்கப்படும்.

Trending News

Latest News

You May Like