தமிழகம் முழுவதும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணி இடமாற்றம்! தமிழக அரசு உத்தரவு!

தமிழகம் முழுவதும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணி இடமாற்றம்! தமிழக அரசு உத்தரவு!

தமிழகம் முழுவதும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணி இடமாற்றம்! தமிழக அரசு உத்தரவு!
X

தமிழகம் முழுவதும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணி மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

இது தொடர்பாக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையா திருவள்ளூர் மாவட்ட ஆட்சியராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். திருவள்ளூர் ஆட்சியர் மகேஸ்வரி காஞ்சிபுரம் ஆட்சியராக மாற்றப்பட்டுள்ளார்.

தருமபுரி ஆட்சியராக இருந்த மலர்விழி கரூர் மாவட்ட ஆட்சியராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். தருமபுரி ஆட்சியராக கார்த்திகாவும், பெரம்பலூர் மாவட்ட ஆட்சியராக வெங்கட பிரியாவும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

கரூர் மாவட்ட ஆட்சியராக இருந்த அன்பழகன், மதுரை மாவட்ட ஆட்சியராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியராக அரவிந்தன் நியமிக்கப்பட்டுள்ளார்.பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் சாந்தா, திருவாரூர் மாவட்ட ஆட்சியராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். மதுரை ஆட்சியராக இருந்த வினய், சேலம் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில் இயக்குநராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

செய்தி மக்கள் தொடர்புத்துறை இயக்குனர் சங்கர், பதிவுத்துறை ஐஜியாக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தமிழக அரசின் அறிவிப்புப்படி, திருவள்ளூர், காஞ்சிபுரம், பெரம்பலூர், மதுரை, கரூர், தருமபுரி ஆகிய மாவட்டங்களின் ஆட்சியர்கள் பணி மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

Next Story
Share it