பிரதமர் அலுவலக இணை செயலாளராக தமிழகத்தை சேர்ந்த ஐ.ஏ.எஸ் நியமனம் !

பிரதமர் அலுவலக இணை செயலாளராக தமிழகத்தை சேர்ந்த ஐ.ஏ.எஸ் நியமனம் !

பிரதமர் அலுவலக இணை செயலாளராக தமிழகத்தை சேர்ந்த ஐ.ஏ.எஸ் நியமனம் !
X

பிரதமர் அலுவலக இணை செயலாளராக தமிழகத்தை சேர்ந்த ஐ.ஏ.எஸ். அமுதா அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்.  இவர் 1994ஆம் ஆண்டு ஐ.ஏ.எஸ் பயிற்சி முடித்தவர் ஆவார்.

ஐ.ஏ.எஸ். அமுதா தற்போது உத்தரகாண்டில் உள்ள முசோரி ஐ.ஏ.எஸ் அகாடமியில் விரிவுரையாளராக பணியாற்றி வருகிறார்.  இந்நிலையில் ஐ.ஏ.எஸ்.அமுதாவுக்கு பிரதமர் அலுவலக இணை செயலாளராக மத்திய அரசு பதவி உயர்வு அளித்துள்ளது.

நேர்மையான அதிகாரியாக மக்களின் அன்பைப் பெற்ற ஐ.ஏ.எஸ். அமுதா தனது சிவில் சர்வீஸ் பணியில் தமிழக உணவுப் பாதுகாப்புத் துறை ஆணையராகப் பணியாற்றிவந்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம், மறைந்த முதலமைச்சர்கள் ஜெயலலிதா, கருணாநிதி  ஆகிய மூவரின் இறுதிச்சடங்கு ஏற்பாடுகளை விரைவாகவும் பொறுப்பாகவும் செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
 

newstm.in 

Next Story
Share it