1. Home
  2. தமிழ்நாடு

முதல்வர் ஸ்டாலின் விரைவில் பரிபூரண உடல்நலம் பெற்றுக் கடமையாற்றிட விழைகிறேன் - தவெக தலைவர் விஜய்..!

1

சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உடல் நலக்குறைவு காரணமாக,அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். மருத்துவமனையில் இருக்கும் நிலையிலும், மக்கள் நலத்திட்டங்கள் தொடர்பாக அதிகாரிகளுடன் அவர் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.

இருப்பினும் 4-வது நாளாக இன்றும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடர் சிகிச்சையில் உள்ளார். இன்னும் 2 அல்லது 3 நாட்களில் வீடு திரும்புவார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனிடையே அப்பல்லோமருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை அமைச்சர் துரைமுருகன் இன்று நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.

இந்த நிலையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உடல் நலம் குறித்து தவெக தலைவர் விஜய் தனது எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர், "தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் விரைவில் பரிபூரண உடல்நலம் பெற்றுக் கடமையாற்றிட விழைகிறேன்" என பதிவிட்டுள்ளார்.


 

Trending News

Latest News

You May Like