கட்சி அளிக்கும் பொறுப்பை ஏற்பேன் - அண்ணாமலை..! அப்போ மாநில தலைவர் மாற்றமா ?
தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை பிரதமர் பதவியேற்பு விழாவில் பங்கேற்க டெல்லி சென்றுள்ளார். அப்போது செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், "பாஜக மேலிடம் அளிக்கும் பொறுப்பை ஏற்று பணி செய்வேன்" எனக் கூறியுள்ளார். இதன் மூலம் அவருக்கு கட்சியில் புதிய பதவி கிடைப்பது உறுதியாகியுள்ளது. எனவே மாநில கட்சி தலைவர் பதவியில் மாற்றம் ஏற்படும் என தெரிகிறது.