கட்சிக்கு துரோகம் செய்பவர்களை மன்னிக்கமாட்டேன் - துரைமுருகன்..!
கட்சிக்குத் துரோகம் செய்பவர்களை மன்னிக்கமாட்டேன்,” எனத் தி.மு.க., பொதுச்செயலாளரும், அமைச்சருமான துரைமுருகன் பேசினார்.
தேர்தல் எப்படி நடக்கும், எப்படி வியூகம் வகுப்பார்கள் என்பது எனக்குத் தெரியும். யாரும் என்னை ஏமாற்ற முடியாது. ஒருமுறை நான் ஏமாந்துவிட்டேன். அது கோவிட் காலத்தில் நடந்தது. அப்போது என்னால் வேகமாக வரவும் போகவும் முடியவில்லை. இல்லை என்றால் கண்ணில் விரலை விட்டு ஆட்டி இருப்பேன்.
சில துரோகங்களை எனக்கு நடத்தினார்கள். ஆனால், துரோகிகளைக் களையெடுத்துவிட்டு தேர்தலை வெற்றிகரமாக நடத்திக் காட்டும் ஆற்றல் துரைமுருகனுக்கு உண்டு. நான் யாரையும் மன்னிப்பேன். கட்சிக்குத் துரோகம் செய்பவர்களை மன்னிக்கமாட்டேன். என்னையே கொல்ல வந்தால் கூட மன்னிப்பேன்.
60- 70 ஆண்டுகள் கட்சியை வளர்த்தவன் நான். ஆகையால் இது எனது கட்சி, நம்முடைய கட்சி என்ற புத்தியோடு இருப்பவன் நான். அந்தக் கட்சிக்குத் துரோகம் செய்பவர்களைவிட வேறு கொடுமை இருக்க முடியாது. போன முறை நான் எல்லோரும் நல்லவர்கள் என நினைத்து இருந்தேன். விளைவு சில பாடங்கள் கற்பிக்கப்பட்டது. அந்தப் பாடத்தைத் திரும்பிப் பார்க்கமாட்டேன் எனத் துரைமுருகன் பேசினார்.