1. Home
  2. தமிழ்நாடு

உனக்காக எதுவும் செய்வேன்..! மனைவியை காதலனுடன் சேர்த்து வைத்த கணவர்!

1

பீகார் மாநிலம் நவாடா மாவட்டத்தை சேர்ந்த ஜோடி ஒன்றுக்கு சமீபத்தில் திருமணம் நடைபெற்றுள்ளது. இதில் கணவர் இரவில் வேலைக்கு சென்ற பிறகு மனைவி தன்னுடைய காதலனுடன் பழகி வந்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் ஒருநாள் இவர்களுக்கு இடையிலான உறவு தெரிய வர அந்த காதலனை கிராம மக்கள் அடித்து உதைத்துள்ளனர். மேலும் அவர்கள் இருவரையும் ஊரை விட்டு வெளியேற்றும்படி வலியுறுத்தியுள்ளனர். 

ஆனால் கணவரோ பொறுமையாக என்ன நடந்தது என கேட்டறிந்து அதன் பின்னர் இருவருக்கும் அங்கே இருந்த கோவிலின் முன் திருமணம் செய்து வைத்தார். காயங்களோடு இருந்த அந்த நபர் தனது காதலுக்கு குங்குமம் வைத்து திருமணம் செய்து கொள்ளும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Trending News

Latest News

You May Like