1. Home
  2. தமிழ்நாடு

அப்படி செய்வதற்கு நான் தற்கொலை செய்து கொள்வேன் : மிஷ்கின்..!

1

பாலாஜி குமார் இயக்கத்தில் இன்பினிட்டி ஃபிலிம் வென்ச்சர்ஸ் & லோட்டஸ் பிக்சர்ஸ் இணைந்து தயாரித்துள்ள திரைப்படம் ‘கொலை’ இதில் நடிகர் விஜய் ஆண்டனி, நடிகைகள் ரித்திகா சிங், மீனாட்சி செளத்ரி உள்ளிட்டப் பலரும் நடித்துள்ளனர்.

இதன் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது…இதில் கலந்துகொண்டு பேசிய மிஷ்கின், கொலை படத்தின் ட்ரெய்லர் வேற மாதிரி இருந்தது.சினிமா என்பது கலையில் இருந்துதான் வந்தது.சினிமா எனும் கலையை புரிந்து இயங்குபவர்கள் இங்கு குறைவு என பேசியிருந்தார்..அதில் நானும் இருக்கவேண்டும் என நினைத்து தான் படங்கள் இயக்கி வருகிறேன்.

‘கொலை’ என்ற இந்தப் படத்தின் டைட்டில் எழுத்துக்காக இயக்குநர் அவ்வளவு கஷ்ட்டப்பட்டுளளார். ஒரு நல்ல இயக்குநர் படத்தலைப்பின் மூலமாக பார்வையாளர்களுக்கு கதை சொல்ல முடியுமா என்று யோசிப்பான். ஒரு மனிதன் ஏன் கொலை செய்கிறான் உடல் முழுவதும் கத்தியால் குத்தப்பட்டு இருக்கும் ஒருவனின் வலியை நாம் எப்படி புரிந்து கொள்வோம் அப்படி ஓர் இடத்துக்கு ஒரு மனிதன் தள்ளப்படுவான் என்றால் அவன் மனதளவில்எப்படி இருப்பான் என்பது முக்கியம் அதை சொல்ல நினைக்கும் இயக்குநர் பாலாஜிக்கு நன்றி.

தொடர்ந்து அவர் கொலை படங்கள் செய்ய வேண்டும் என்று வேண்டுகிறேன்..என்னிடம் ஜாலியான ரொமான்டிக் காமெடி படங்கள் எடுக்க மாட்டீர்களா எனக் கேட்கிறார்கள்.அப்படி செய்வதற்கு நான் தற்கொலை செய்து கொள்வேன். அவையெல்லாமே போர் தான்..

Trending News

Latest News

You May Like