1. Home
  2. தமிழ்நாடு

நாடு முழுவதும் பிரச்சாரம் செய்ய சொன்னாலும் இறங்கி பிரச்சாரம் செய்வேன் : குஷ்பு..!

1

தேசிய பெண்கள் ஆணைய உறுப்பினர் குஷ்பூ செய்தியாளர்களிடம் பேசியதாவது,"இந்தியா முழுவதும் காங்கிரஸ் மற்றும் பல்வேறு கட்சிகளில் இருந்து விலகி பாஜகவில் இணைகிறார்கள். அதற்குக் காரணம் பிரதமர் மோடி மீது வைத்துள்ள நம்பிக்கை. கடந்த 65 ஆண்டு காலத்தில் காங்கிரஸ் ஆட்சி காலத்தில் செய்ய முடியாததை கடந்த 10 வருடத்தில் மோடி செய்து காண்பித்துள்ளார். இதுதான் காங்கிரசுக்கும் பாஜகவுக்கும் உள்ள வித்தியாசம்.

தமிழகத்தில் 1967 க்கு பிறகு ஏன் காங்கிரஸ் சொந்த காலில் நிற்க முடியவில்லை. காமராஜர் பெயரை வைத்து காங்கிரஸ் பிச்சை எடுக்கிறார்கள். திமுக அல்லது அதிமுக இரண்டுடன் சேர்ந்து காங்கிரஸ் பயனடைந்து கொண்டிருக்கிறார்கள். தைரியம் இருந்தால் தமிழகத்தில் தனியாக நின்று இருக்கலாமே,"என குஷ்பு கேள்வி எழுப்பினார்.   தொடர்ந்து பேசிய குஷ்பூ, அமலாக்கத்துறை மற்றும் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் சுதந்திரமாக செயல்படுகிறார்கள். போதைப் பொருள் கடத்தல் வழக்கில் தலைமறைவாக இருந்த ஜாபர் சாதிக்கை  கைது செய்துள்ளார்கள். ஜாபர் சாதிக் யாருடைய ஆள். திராவிட முன்னேற்றக் கழகம் தானே. ஜாபர் சாதிக்கை கட்சியிலிருந்து நீக்கி விட்டால் வேலை முடிந்து விட்டதா. இப்போ தானே கைதாகி உள்ளார். தொடர்புடையவர்களின் பெயரெல்லாம் இனிமேல் தானே வரும். என்றார்.

 நாடாளுமன்ற தேர்தலில் நீங்கள் போட்டியிடுவீர்களா? என கேட்டதற்கு," பிரதமர் மோடி, அமித்ஷா மற்றும் நட்டா ஆகியோர் போய் எங்கு நிற்க சொன்னாலும் நிற்பேன். நாடு முழுவதும் பிரச்சாரம் செய்ய சொன்னாலும் இறங்கி பிரச்சாரம் செய்வேன். கட்சிக்காக நான் வேலை செய்ய வந்துள்ளேன்," என்றார். 

வேலூர் தொகுதிக்கான வெற்றிச் சின்னமாகிய ஏ சி எஸ் என் பக்கத்திலேயே அமர்ந்திருக்கிறார்.நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் வேலூர் தொகுதியில் ஏசி சண்முகம் தான் வெற்றி பெறப் போகிறார். அதில் எந்த சந்தேகமும் இல்லை.  சினிமாவில் இருந்து நிறைய பேர் அரசியலுக்கு வந்துள்ளார்கள். புரட்சித்தலைவர் தொடங்கி, புரட்சித்தலைவி, கலைஞர், கமலஹாசன் என விஜய் வரை அனைவருக்கும் மக்கள் மத்தியில் அனைவருக்கும் செல்வாக்கு மற்றும் அன்பு இருந்தது. உதயநிதி ஸ்டாலினும் சினிமாவில் ஹீரோவானது பிறகு தானே அரசியலுக்கு வந்தார். ஏன் முதலமைச்சரும் நடிகனாக வேண்டுமென்று தானே ஆசைப்பட்டார். அதற்குப் பிறகுதானே அரசியலுக்கு வந்தார். என பேசினார்.

Trending News

Latest News

You May Like