நான் சுஷாந்த் பாய் கிட்ட போறேன்.. கடிதம் எழுதிவிட்டு கோவையில் இளைஞர் விபரீத முடிவு !

நான் சுஷாந்த் பாய் கிட்ட போறேன்.. கடிதம் எழுதிவிட்டு கோவையில் இளைஞர் விபரீத முடிவு !

நான் சுஷாந்த் பாய் கிட்ட போறேன்.. கடிதம் எழுதிவிட்டு கோவையில் இளைஞர் விபரீத முடிவு !
X

பிரபல ஹிந்தி திரைப்பட நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் கடந்த 14ஆம் தேதியன்று தற்கொலை செய்து கொண்டார்.  34 வயதான சுஷாந்த், மும்பை பந்த்ராவில் உள்ள தனது வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.

2013ல்  Kai po che என்ற படத்தில் அறிமுகமான இவர், கிரிக்கெட் வீரரும், இந்திய அணியின் முன்னாள் கேப்டனுமான எம்.எஸ். தோனியின் சுயசரிதை படத்தில் நடித்திருந்தார். இவர் நடித்த Kai po che, எம்.எஸ். தோனி - தி அன்டோல்டு ஸ்டோரி ஆகிய படங்களுக்கு விருதுகளை பெற்றுள்ளார். 

2019 ஆம் ஆண்டு வெளியான 'சிச்சோர்' இவரது நடிப்பில் வெளியான கடைசிப் படமாகும். இந்நிலையில், இவரின் தற்கொலை செய்தி இந்தியத் திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

இந்நிலையில் கோவையில் நடிகர் சுஷாந்த் சிங் மரணத்தினால் மனமுடைந்த ராஜஸ்தான் மாநில தொழிலாளி ஒருவர் தனது உயிரை மாய்த்துக் கொண்டார்.

ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர் 20 வயதான இளைஞர் கணபத்தாஸ். கோவை அய்யண்ண கவுடர் வீதியில் வசித்து வந்த கணபத்தாஸ், வெரைட்டி ஹால்  பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். 

இந்நிலையில் நேற்று மதியம் கணபத் தாஸ்  அறைக்கு உணவருந்த வந்துள்ளார். ஆனால் நீண்ட நேரம் ஆகியும் அவரது அறையின் கதவு திறக்கப்படவில்லை.

இதனால் அங்கு சென்ற சக ஊழியர்கள் பார்த்த போது கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்தது. கதவை உடைத்து பார்த்த போது  கணபத் தாஸ் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

இதுகுறித்து வெரைட்டி ஹால் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் வந்த காவல் துறையினர், கணபத் தாசின் உடலை மீட்டு உடற்கூராய்விற்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த தற்கொலை தொடர்பாக வெரைட்டி ஹால் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கணபத் தாஸ் பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங்கின் தீவிர ரசிகர் எனவும், சுஷாந்த் சிங்கின் தற்கொலை காரணமாக மனமுடைந்து காணப்பட்டதாகவும் கூறப்படுகிறது. 

இந்நிலையில் அவரது அறையில் இருந்து கடிதம் ஒன்று எடுக்கப்பட்டுள்ளது. அதில், "நான் சுஷாந்த் சிங் பாய் கிட்ட போறேன்" என்று இந்தியில் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்துள்ளார். அவரது உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

newstm.in 

Next Story
Share it