1. Home
  2. தமிழ்நாடு

ஒரே நாடு ஒரே தேர்தலை நான் வரவேற்கிறேன்: ராமதாஸ்..!

1

 பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் செய்தியாளர்களிடம் கூறியது, ''காவிரி டெல்டாவில் குறுவை சாகுபடி பொய்த்துப் போகின்ற நிலைமையை கர்நாடகா அரசு மேற்கொண்டு வருகிறது. ஆனாலும் கர்நாடக மாநிலத்தை ஆளுபவர்களின் மனம் இன்னமும் இலகாமல் உள்ளது. காவிரி நீர் பிரச்சனையில் தமிழக அரசு சரியான வகையில் அனைத்து வகையிலும் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். அதற்கு சட்டமும் நமக்கு துணையாக இருக்க வேண்டும். இந்தியாவிலுள்ள அனைவரும் ஒரு தாய் மக்கள் என்று சொல்லி வருகின்றோம். இந்த மக்கள் ஒற்றுமையுடன் நீதி பெற்று வாழ சமூக நீதி வேண்டும். அந்த சமூக நீதி தான் அனைவருக்குமான பரிகாரமாகும்.

வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக செயற்குழு, பொதுக்குழு கூடிய பின்னர் முடிவெடுத்து அறிவிப்போம். இதே போல் இந்த மயிலாடுதுறை தொகுதி மட்டுமில்லாமல், தமிழகத்திலுள்ள 39 தொகுதிகளையும் நாங்கள் கைப்பற்றுவதற்கான வாய்ப்புண்டு. தமிழகத்தின் சட்டம் ஒழுங்கை காப்பாற்றுவதில் காவல்துறை பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. ஜி-20 மாநாடு தொடர்பாக அதிபர்களுக்கு அனுப்பிய அழைப்பிதழிலில் அச்சிட்டுள்ள கவர்ன்மெண்ட் ஆப் பாரத் என்பதை விட இப்போது இருக்கின்ற இந்தியா என்ற பெயரே போதுமானதாகும். இந்தியா என்பது ஒரே நாடாகும். நாடாளுமன்றம் மற்றும் சட்டப்பேரவைக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடப்பது நல்லது, அதனால் ஒரே நாடு ஒரே தேர்தலை நான் வரவேற்கிறேன்'' எனத் தெரிவித்தார்.

Trending News

Latest News

You May Like