1. Home
  2. தமிழ்நாடு

நான் அப்போ மும்பையிலே இல்லை...வெளியான மிக முக்கிய ஆதாரம்..!

1

கடந்த 2015ல் கேரளாவில் பிரபல நடிகை ஓடும் காரில் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் மாநிலம் முழுக்க அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதையடுத்து அங்கு ஓய்வு பெற்ற நீதிபதி ஹேமா தலைமையில் கமிட்டி அமைக்கப்பட்டது.

மலையாள சினிமாவில் பெண்கள் எதிர்கொள்ளும் பாலியல் அத்துமீறல்கள் குறித்து விசாரித்த இந்த குழு ரிப்போர்ட்டை கடந்த 2019ம் ஆண்டிலேயே கேரள அரசிடம் சமர்ப்பித்து விட்டது. இருப்பினும், கேரள அரசு அதை வெளியிடவில்லை. நீண்ட சட்ட போராட்டத்திற்குப் பிறகு சமீபத்தில் தான் அந்த ரிப்போர்ட் வெளியிடப்பட்டது. அதில் பல முன்னணி நடிகர்களின் பெயர்களும் இடம்பெற்று இருந்ததாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து இது தொடர்பாக விசாரிக்கச் சிறப்புப் புலனாய்வுக் குழுவை அமைத்து கேரள அரசு உத்தரவிட்டது. இந்தச் சூழலில் சமீபத்தில் கேரள மாநிலம் நேரியமங்கலத்தை சேர்ந்த பெண் ஒருவர் பிரபல மலையாள நடிகர் நிவின் பாலி மீது பலாத்கார புகார் அளித்தார். பட வாய்ப்பு அளிப்பதாகக் கூறி துபாயில் வைத்து தன்னை பலாத்காரம் செய்ததாக அவர் தனது புகாரில் குறிப்பிட்டுள்ளார்.

பெண் அளித்த புகாரின் அடிப்படையில் எர்ணாகுளம் ஊன்னுக்கல் போலீசார் நிவின் பாலி உள்ளிட்ட 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இந்தச் சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.. இருப்பினும், தன் மீதான புகார்களைத் திட்டவட்டமாக மறுத்த நிவின் பாலி, தன் மீதான குற்றச்சாட்டு முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது என்றும் பாலியல் குற்றச்சாட்டு ஆதாரமற்றவை என்பதை நிரூபிக்க எந்த எல்லைக்கும் செல்வேன் என்றும் கூறினார். இதற்கிடையே இந்த விவகாரத்தில் இப்போது திடீர் திருப்பமாக ஹோட்டல் ஆவணங்கள் வெளியாகியுள்ளது.

கடந்த 2023ம் ஆண்டு டிசம்பர் மாதம் 15ம் தேதி தன்னை நிவின் பாலி பலாத்காரம் செய்ததாகப் புகாரளித்திருந்தார். அதன் அடிப்படையிலேயே வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதற்கிடையே சம்பவம் நடந்த நாளன்று நிவின் பாலி துபாயில் இல்லை.. கேரளாவில் இருந்ததற்கான ஆதாரங்கள் இப்போது வெளியாகியுள்ளது. கொச்சியில் உள்ள கிரவுன் பிளாசாவில் அவர் தங்கியதற்கான ஹோட்டல் பில்லை வெளியிட்டுள்ளனர். டிசம்பர். 14 மதியம் முதல் டிசம்பர் 15ம் தேதி மாலை வரை நிவின் பாலி அந்த ஹோட்டலிலேயே தங்கியிருக்கிறார்.

1

மேலும், ஹ்ருதயம் படத்தின் இயக்குநர் வினீத் சீனிவாசனும் குற்றம் நடந்ததாகச் சொல்லப்படும் நாளில் நிவின் பாலி தன்னுடன் இருந்ததாகக் கறியுள்ளார். டிசம்பர் 15ஆம் தேதி அதிகாலை 3 மணி வரை எர்ணாகுளம் உள்ள கொச்சியில் உள்ள நியூக்ளியஸ் மாலில் 'வர்ஷங்களுக்கு ஷேஷம்' படத்தின் படப்பிடிப்பில் நிவின் பாலி இருந்ததாக வினோத் சீனிவாசன் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், "எர்ணாகுளத்தில் உள்ள நியூக்ளியஸ் மாலில் படப்பிடிப்பு நடந்தது. அங்குக் கூட்டம் அதிகமாக இருந்ததால் கிரவுன் பிளாசாவுக்கு சென்று ஷூட்டிங்கை தொடர்ந்தோம். நள்ளிரவு வரை நிவின் பாலி அங்கு என்னுடன் தான் இருந்தார்" என்றார்.

Trending News

Latest News

You May Like