1. Home
  2. தமிழ்நாடு

தொழில் தொடங்க ஆசை...ஆனால் பணம் இல்லையா..? அடமானம் வைக்காமல் ரூ.10 லட்சம் வரை கடன் கிடைக்கும்..!

1

முத்ரா கடன் என்பது PMMY இன் கீழ் ஒரு அரசாங்க திட்டமாகும்.யாருக்கெல்லாம் தொழில் தொடங்க விருப்பமோ அவர்களுக்கு மத்திய அரசு நிதியுதவியை வழங்குவதுதான் முத்ரா திட்டம். அந்தவகையில், கிட்டத்தட்ட 10 லட்சம் ரூபாய் வரை இந்த திட்டத்தின்கீழ் கடன் பெறலாம்..

மொத்தம் 3 வகைகளில், இந்த திட்டத்தின்கீழ் கடன் வழங்கப்படுகிறது... இந்த 3 வகைகளிலுமே வேறுவேறு கடன் வசதிகள் இருக்கின்றன.. குறிப்பாக, "சிஷு" (Shishu) என்ற திட்டத்தின்கீழ் ரூ.50,000 வரையில் கடன் தரப்படுகிறது. "கிஷோர்" என்ற திட்டத்தின் கீழ் ரூ.50 ஆயிரம் முதல் ரூ.5 லட்சம் வரையும், "தருண்" என்ற திட்டத்தின்மூலம், ரூ.5 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை கடன்கள் வழங்கப்படுகின்றன.

யாரிடம் கடன் கேட்டாலும் அதற்கான அத்தாட்சியும், உத்தரவாதமும் கேட்கப்படும். ஆனால், இந்த திட்டத்தில் அப்படி எதுவுமே இல்லை.. பொதுவான தகவல்களை, அது தொடர்பான ஆவணங்களுடன் இணைத்து தந்தால் போதும்.வணிக வங்கிகள், பிராந்திய கிராமப்புற வங்கிகள், சிறு நிதி வங்கிகள், கூட்டுறவு வங்கிகள், நிதி நிறுவனங்கள் மற்றும் வங்கி சாராத நிதி நிறுவனங்கள், முத்ரா கடன்களை வழங்குகின்றன.

முத்ரா கடன் திட்டத்துக்கான விண்ணப்பங்கள் நிரப்பி, அத்துடன் அடையாள சான்று, இருப்பிட சான்று, போட்டோ, இயந்திரம் மற்றும் இதர உபகரணங்கள் வாங்குவதற்கான ரசீது, சப்ளையர் விபரங்கள், தொழிற்சாலை இருக்கும் இடம் போன்ற விவரங்களை சேர்த்து தர வேண்டும்.. வங்கி உங்கள் விண்ணப்பத்தை சரிபார்த்து, ஒரு மாதத்திற்குள் கடன் அனுமதிக்கப்படும்.

விவசாயம், உள்ளிட்ட வேறு எந்த தொழிலுக்கும் இந்த முத்ரா கடன் பெற முடியாது.. புதிதாக தொழில் தொடங்க ஆசைப்படுவோருக்கு மட்டுமே இந்த கடன் திட்டம் பயனுள்ளதாக இருக்கும்.

உதாரணத்துக்கு உற்பத்தி, வர்த்தகம், சேவைத் துறைகள், கோழிப்பண்ணை, பால் பண்ணை, தேனீ வளர்ப்பு போன்ற விவசாயம் தொடர்பான தொழில்களுக்கு கடன் வழங்கப்படுகிறது.. சிறு தயாரிப்பு ஆலைகள், சேவை வழங்குபவர்கள், கடைக்காரர்கள், காய்கறி அல்லது பழ வியாபாரிகள், உணவகங்கள், பழுது பார்க்கும் கடைகள், எந்திரம் இயக்குபவர்கள், கைவினைஞர்கள், உணவு பதப்படுத்துபவர்கள் மற்றும் இது போன்ற நிறுவனங்களை நடத்துபவர்கள் முத்ரா திட்டத்தில் கடன் பெறலாம்.இந்த வணிகங்கள் கிராமப்புறம் மற்றும் நகர்ப்புறங்களில அமைந்திருக்க வேண்டும் என்பது முக்கியம்.வழிகாட்டுதலின்படி கடன் வழங்கும் நிறுவனங்களால் வட்டி விகிதம் தீர்மானிக்கப்படுகிறது.

எப்படி விண்ணப்பிக்க வேண்டும்?

ஸ்டெப் 1: www.udyamimitra.in என்ற வலைதளத்துக்கு செல்ல வேண்டும்.

ஸ்டெப் 2: முகப்பு திரையில் 'Apply Now'என்பதை கிளிக் செய்யவும்.

ஸ்டெப் 3: New Entrepreneur (புதிய தொழில் முனைவோர்) Existing Entrepreneur (தொழில்முனைவோர்), 'Self-Employed (சுய தொழில் செய்பவர்) ஆகியவற்றில் ஒன்றை தேர்வு செய்யவும்.

ஸ்டெப் 4: புதிய பதிவுகளுக்கு, விண்ணப்பதாரரின் பெயர், இமெயில் அட்ரஸ் மற்றும் மொபைல் எண் போன்றவற்றை கொடுக்க வேண்டும்.

ஸ்டெப் 5: OTP உருவாக்கி பதிவு செயல் முறையை நிறைவு செய்ய வேண்டும்

Trending News

Latest News

You May Like