1. Home
  2. தமிழ்நாடு

அண்ணா பல்கலைக்கழக மாணவர்களுடன் நான் உறுதுணையாக நிற்கிறேன் - ஜீ.வி.பிரகாஷ் ட்வீட்..!

Q

அண்ணா பல்கலைக்கழக மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பையும், அதிர்வலையையும் ஏற்படுத்தியது. 

தமிழகம் முழுவதும் இந்த சம்பவத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அதோடு பல்வேறு தரப்பினரும் இந்த சம்பவம் தொடர்பாக எதிர்ப்பு குரலை பதிவு செய்து வருகின்றனர்.

அந்த வகையில், இசையமைப்பாளர் மற்றும் நடிகர் ஜீ.வி. பிரகாஷ் குமார், “அண்ணா பல்கலைக்கழக மாணவர்களுடன் நான் உறுதுணையாக நிற்கிறேன். நம் பெண்களுக்கு அதிக அதிகாரம் வேண்டும். குற்றவாளிக்கு அதிகபட்ச தண்டனை கொடுக்க வேண்டும். அவரை போன்றவர்களை வெளியே விடக்கூடாது” என தனது எக்ஸ் பக்கத்தில் தனது எதிர்ப்பு குரலை பதிவு செய்துள்ளார்.


 

Trending News

Latest News

You May Like