அவசரத்தில் பேசிவிட்டேன்.. தனது பேச்சுக்கு வருத்தம் தெரிவித்த குஷ்பு !

நடிகை குஷ்பு காங்கிரஸ் கட்சியில் தேசிய செய்தி தொடர்பாளராக இருந்தார். ஆனால் கட்சியில் அதிருப்தி காரணமாக டெல்லி சென்று தன்னை பா.ஜ.கவில் அவர் இணைத்துக்கொண்டார்.
பின்னர் சென்னை திரும்பிய அவர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தப்போது, காங்கிரஸ் கட்சி மீது பல்வேறு விமர்சனங்களை முன்வைத்தார்.
குறிப்பாக காங்கிரஸ் மூளை வளர்ச்சி இல்லாத கட்சி என கடுமையாக விமர்சித்தார். குஷ்புவின் இந்த பேச்சுக்கு மாற்றுத்திறனாளிகள் அமைப்பு கடும் கண்டனம் தெரிவித்தது. மேலும் குஷ்பு மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க காவல் நிலையத்தில் புகார் அளித்தது.
அதில், மாற்றுத்திறனாளிகள் குறித்த பேசியது சட்டத்திற்கு புறம்பானது. இதனால் அவர் மீது நடவடிக்கை எடுத்தால் சிறை செல்லும் வகையில் சட்டம் உள்ளது. இதனால் குஷ்பு மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை எழுந்தது.
இந்நிலையில் தனது பேச்சுக்கு பாஜகவைச் சேர்ந்த குஷ்பு வருத்தம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து குஷ்பு தெரிவிக்கையில் ‘‘ஆழ்ந்த துயரம், வேதனை, அவசரத்தின் ஒரு கணத்தில் 2 சொற்றொடர்களை தவறாக பயன்படுத்தி விட்டேன். மனஉளைச்சல், கவனக்குறைாவல் செய்ததை இனிமேல் ஒருபோதும் செய்யமாட்டேன்’’ எனத் தெரிவித்துள்ளார்.
newstm.in