1. Home
  2. தமிழ்நாடு

#BREAKING : சல்யூட் அடிக்கிறேன் பிரதமர் மோடி பெருமிதம்!

Q

ஆபரேசன் சிந்தூர்' நடவடிக்கைக்கு பிறகு பிரதமர் மோடி இன்று (மே 12) முதல் முறையாக நாட்டு மக்களிடம் உரையாற்றுகிறார். அப்போது" இந்திய ராணுவத்திற்கும், ஆயுத விஞ்ஞானிகளுக்கு சல்யூட் அடிக்கிறேன். 'ஆபரேசன் சிந்தூருக்கு' ஆதரவாக நின்ற மக்களுக்கு நன்றி" என தெரிவித்து வருகிறார்.

 

நாட்டின் பலம், ராணுவ வீரர்கள் பலம் நிரூபணம் செய்யப்பட்டுள்ளது. நாம் என்ன செய்வோம் என்று உலகமே கண்டு விட்டது. நமது ராணுவ வீரர்களுக்கும், உளவுத்துறையினருக்கும், ஆயுதங்களை உருவாக்கிய விஞ்ஞானிகளுக்கும் எனது வணக்கங்கள். ஆபரேஷன் சிந்துாருக்கு ஆதரவாக நின்ற மக்களுக்கு நன்றி.

 

பஹல்காமில், துளியும் கருணை இல்லாமல் குடும்பத்தினர், குழந்தைகள் கண் முன்னே குடும்ப தலைவர்கள் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம், என்னை மனதளவில் மிகவும் வேதனைக்கு ஆளாக்கியது.

இந்த தாக்குதலுக்கு பிறகு, ஒட்டு மொத்த நாட்டு மக்களும், பயங்கரவாதிகளுக்கு எதிராக ஒன்றுபட்டு நின்றனர்.பயங்கரவாதிகளை தீர்த்துக் கட்டுவேன் என்று நான் உறுதி அளித்தேன்.

அதன்படி இந்தியா அதிரடி தாக்குதல் நடத்தியது. பெண்களின் குங்குமத்தை அழித்தால் என்ன நடக்கும் என்பதை இன்று பயங்கரவாதிகள் உணர்ந்துள்ளனர். அந்தளவுக்கு நாம் துல்லிய தாக்குதல் நடத்தி இருக்கிறோம்.

இத்தகைய தாக்குதலை நாம் நடத்துவோம் என்று பயங்கரவாதிகள் நினைத்துக்கூட பார்த்திருக்க மாட்டார்கள். சிந்துார் நடவடிக்கை மூலம், பயங்கரவாதிகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்கப்பட்டுள்ளது.பயங்கரவாத முகாம்கள் துடைத்து எறியப்படுவதை நமது ராணுவம் உறுதி செய்துள்ளது.

பயங்கரவாத முகாம்கள் பகாவல்பூர், முரித்கேவில் முற்றிலும் அழிக்கப்பட்டுள்ளன. பல்வேறு பயங்கரவாத தாக்குதல் சம்பவங்களில் இந்த முகாம்களுக்கு முக்கிய தொடர்பு இருக்கிறது.

பாகிஸ்தான் மீதான தாக்குதலை தற்காலிகமாக மட்டுமே இந்தியா நிறுத்தி வைத்திருப்பதாக மோடி தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் நமது எல்லையை தாக்கியதாகவும், ஆனால் இந்தியா, பாகிஸ்தானின் இதயத்தையே தாக்கியதாக அவர் கூறினார்.

பாகிஸ்தானின் அணுஆயுத மிரட்டல் இந்தியாவிடம் செல்லாது, அந்நாட்டுக்கு எதிரான தாக்குதலை தற்காலிகமாகவே நிறுத்தியுள்ளது, கைவிடவில்லை, நாட்டு மக்களை காக்க எந்த எல்லைக்கும் இந்தியா செல்லும் என்றார்.

Trending News

Latest News

You May Like