3 நாட்களுக்குள் தமிழ் மக்களிடம் மன்னிப்பு கேட்கணும்... இல்லாவிட்டால் வீரலட்சுமி எச்சரிக்கை..!

பிரபல நடிகை கஸ்தூரி கூறிய கருத்து ஒன்று, சோஷியல் மீடியாவில் வைரலாகி கொண்டிருக்கிறது. கஸ்தூரி ஒரு சேனலுக்கு அளித்த பேட்டியில், இடஒதுக்கீடு பெறுபவர்கள், கொலைக்காரர்கள் என்று சொன்னதாக தெரிகிறது.. இதையடுத்து, கஸ்தூரிக்கு கண்டனங்கள் குவிந்து வருகின்றன. பலரும் திரண்டு வந்து சோஷியல் மீடியாவில் கஸ்தூரிக்கு பதிலடி தந்து கொண்டிருக்கிறார்கள். அந்த வகையில் தமிழர் முன்னேற்றப்படை தலைவர் வீரலட்சுமியும், தன்னுடைய கண்டனத்தை, வீடியோ வெளியிட்டு பதிவு செய்துள்ளார். அதில், கஸ்தூரியை சரமாரியாக விமர்சித்து கேள்வியும் எழுப்பியிருக்கிறார்.
குறிப்பாக, “இட ஒதுக்கீடு பெறுபவர்கள் கொலைக்கார பசங்களா? முதல்ல இடஒதுக்கீடு என்றால் என்ன என்று தெரியுமா? அந்த இடஒதுக்கீடு பெறும் கொலைக்கார பசங்க டிக்கெட் வாங்கும் பணத்தில்தானே சாப்பாடு சாப்பிடுகிறாய்? டிரஸ், மேக்கப்பொருட்களை வாங்குகிறாய்? இந்த தமிழ்மண்ணில் சமூகநீதிக்காகவும், இடஒதுக்கீட்டை பெறுவதற்காகவும், போராட்டம் செய்தவர்களின் வரலாறு தெரியுமா?என் குடும்பத்தில், இந்த கோட்டாவை பெறுவதற்காக 21 பேர் குண்டடிபட்டு வீரமரணம் அடைந்த வரலாறு தெரியுமா?
இப்படித்தான் அன்று திருநங்கைகளை பற்றியும் தரக்குறைவாக விமர்சித்தாய்..நடிகை கஸ்தூரி, 3 நாட்களுக்குள் தமிழ் மக்களிடம் மன்னிப்பு கேட்கணும், இல்லாவிட்டால், தமிழர் முன்னேற்றபடையினர் கஸ்தூரியின் வீட்டை முற்றுகையிடுவார்கள், தக்க பாடத்தையும் கஸ்தூரிக்கு புகட்டுவார்கள்” என்று வீரலட்சுமி ஆவேசமாக கூறியிருக்கிறார்.
இட ஒதுக்கீடு பற்றிய கருத்து.."அப்போ தெரியலயா உனக்கு..இதோட"எரிமலையாய் வெடித்து பேசிய வீரலட்சுமி#Veeralakshmi | #ActressKasthuri | #Controversialissues | #TamilNadu | #Reservation | #ThanthiTV pic.twitter.com/kHQkCALPEC
— Thanthi TV (@ThanthiTV) April 27, 2024