1. Home
  2. தமிழ்நாடு

ஞாபகம் வருதே... ஞாபகம் வருதே...'21 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்டோகிராப்' ரீ ரிலீஸ் ... AI ட்ரெய்லர் வெளியீடு!

1

இயக்குனர் சேரனின் ஆட்டோகிராப் திரைப்படம் 2004 ஆம் ஆண்டு வெளியானது. அப்போதே இப்படத்தின் பாடல்கள், காட்சிகள் என பட்டித்தொட்டியெங்கும் ஹிட் ஆனது. இன்று வரை சேரனின் திரைப்பயணத்டில் மைல்கல்லாக விளங்குகிறது. ஒரு தசாப்தத்தின் சிறந்த படங்களை எடுத்துக் கொண்டால் ஆட்டோகிராப் நிச்சயமாக அதில் இடம்பெறும். அப்பேர்ப்பட்ட படத்தில் முதலில் நடிக்க இருந்தது நடிகர் விஜய் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தில் விஜயின் கால்ஷிட்டிற்காக நீண்ட காலம் சேரன் காத்திருந்ததாக அவரே தெரிவித்துள்ளார்.

மேலும் அப்படம் அந்த ஆண்டின் சிறந்த பொழுதுபோக்கு திரைப்படத்திற்கான தேசிய விருதையும் பெற்றது. கதாநாயகனின் 4 வெவ்வேறு காலகட்டத்தில் நடக்கும் கதை என்பதால் இப்படத்திற்கு விஜய் மில்டன், ரவி வர்மன் உட்பட மொத்தம் 4 ஒளிப்பதிவாளர்கள் பயன்படுத்தப்பட்டு இருப்பார்கள். 

தற்போதைய இளைஞர்கள் கொண்டாடிய பிரேமம் படத்திற்கு ஆட்டோகிராப் படமே முன்னோடி என்றும் கூறலாம்.

இந்நிலையில் ரசிகர்களால் இன்றளவும் கொண்டாடப்படும் ஆட்டோகிராப் திரைப்படம் விரைவில் ரீ- ரிலீஸ் செய்யப்பட இருப்பதாக  ஏஐ ட்ரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது. இதனை  இயக்குனர் லோகேஷ் கனகராஜ் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளார்.


 

Trending News

Latest News

You May Like