1. Home
  2. தமிழ்நாடு

காங்கிரஸ் கட்சி 40 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என்று நான் பிரார்த்திக்கிறேன் : பிரதமர் நரேந்திர மோடி..!

1

பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த ஜன. 31-ம் தேதி ஜனாதிபதி திரௌபதி முர்மு உரையுடன் தொடங்கியது. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பிப். 1-ம் தேதி இடைக்கால நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார். இதனிடையே, ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்திற்கு பதிலளித்து பிரதமர் நரேந்திர மோடி மாநிலங்களவையில் நேற்று பிற்பகல் 2 மணிக்கு உரையாற்றினார்.  அப்போது அவர் கூறியதாவது.,

“ஜனாதிபதி திரௌபதி முர்மு தனது உரையில் இந்தியாவின் ஆற்றல், வலிமை மற்றும் பிரகாசமான எதிர்காலம் பற்றி பேசினார். ஜனாதிபதி திரௌபதி முர்முவுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அன்று என்னால் சொல்ல முடியவில்லை. ஆனால், காங்கிரஸ் தலைவர் கார்கேவுக்கு  எனது சிறப்பு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அன்று மிகுந்த கவனத்துடனும் மகிழ்ச்சியுடனும் அவர் பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்தேன். 

2024 மக்களவைத் தேர்தலில், காங்கிரஸால் 40 தொகுதிகளை தாண்ட முடியாது என்ற சவால் மேற்கு வங்க முதல்வர் மம்தா தெரிவித்துள்ளார். நீங்கள் 40 தொகுதிகளில் வெற்றிபெற வேண்டும் என்று நான் பிரார்த்திக்கிறேன். நாட்டை பிளவுபடுத்துவதில் காங்கிரஸ் கவனம் செலுத்துகிறது. கடந்த காலத்தில் நீங்கள் என்ன செய்தீர்கள்?. இப்போது எங்களுக்கு அறிவுரை வழங்குகிறீர்கள். நாட்டின் பாதுகாப்பை பற்றி பேசும் காங்கிரஸ், அவர்கள் ஆட்சியில் இருந்த போது என்ன செய்தது? இவ்வாறு பிரதமர் மோடி கேள்வி எழுப்பினார். 

Trending News

Latest News

You May Like