பாஜகவுடன் கூட்டணி அமைத்தால் அதிமுகவில் இருந்து விலகுவேன் என நான் எப்போதும் கூறவில்லை: ஜெயக்குமார்..!

அதிமுக- பாஜக இடையேயான கூட்டணி 2 ஆண்டுகளுக்கு முன்னர் முறிந்த போது, ஊடகங்களுக்கு நாள்தோறும் பேட்டி கொடுத்தவர் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார். அப்போது பாஜகவை மிக கடுமையாக விமர்சித்தார் .
பாஜகவுடன் ஒட்டும் இல்லை உறவும் இல்லை; இப்போதும் எப்போதும் கூட்டணி இல்லை என்றெல்லாம் ஜெயக்குமார் வசனத்தை அள்ளிவிட்டார். தமிழ்நாடு பாஜகவின் முன்னாள் தலைவரான அண்ணாமலையையும் மிக கடுமையாக விமர்சித்தார் ஜெயக்குமார்.
அதிமுக- பாஜக இடைஇந்த நிலையில் சென்னையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சந்தித்து, அதிமுக- பாஜக கூட்டணியை உறுதி செய்து அறிவித்தனர். இதனைத் தொடர்ந்து ஜெயக்குமார் கடந்த சில நாட்களாகவே கனத்த மவுனம் காத்து வருகிறார். ஊடகங்களும் மாஜி அமைச்சர் ஜெயக்குமார்? எங்கே என கேள்வி கேட்டு வந்தன..
இந்த நிலையில் மீண்டும் கூட்டணி அமைந்துள்லது குறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கருத்து எதுவும் தெரிவிக்க மறுத்துவிட்டார். அத்துடன் அதிமுக- பாஜக கூட்டணிக்கு எதிராக, அதிமுகவில் இருந்து தாம் விலகவில்லை எனவும் விளக்கம் அளித்துள்ளார் ஜெயக்குமார். முன்னர், அதிமுக- பாஜக கூட்டணி அமைந்தால் கட்சியை விட்டு வெளியேறுவேன் என அறிவித்திருந்தார் ஜெயக்குமார்.