1. Home
  2. தமிழ்நாடு

வரும் 2026 சட்டசபை தேர்தலில் எனக்கு சீட் இல்லாமல் கூட போகலாம்: அமைச்சர் பொன்முடி!

1

விழுப்புரம் தெற்கு மாவட்ட திமுக சார்பாக முகவர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் வனத்துறை அமைச்சர் பொன்முடி, திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் லட்சுமணன், அன்னியூர் சிவா உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அப்போது, வனத்துறை அமைச்சர் பொன்முடி பேசியதாவது:-

வரும் 2026 சட்டசபை தேர்தலில் யார் வேட்பாளராக நிறுத்தப்பட்டாலும், ஏன் எனக்கே கூட இடம் இல்லாமல் போகலாம்.. அதனால், யார் நிறுத்தபட்டாலும் யார் எதிர்த்து நின்றாலும் திமுக தான் வெற்றி பெறும் என்ற நிலையில் நிர்வாகிகள் செயல்பட வேண்டும். சட்டசபை தேர்தலில் விழுப்புரம் மாவட்டத்திலுள்ள 7 தொகுதிகளில் திமுக மற்றும் கூட்டணி கட்சியினர் போட்டியிடுவார்கள் என்பதை யார் நிறுத்தினாலும் வெற்றிபெறச் செய்யவேண்டும்.

தலைவர் யாரை கழக வேட்பாளராக நிறுத்துகிறாரோ அவர்தான் நம் கண் முன் தெரிய வேண்டுமே தவிர வேறு எதுவும் இருக்கக்கூடாது. முதலமைச்சரின் உணர்வோடு நீங்கள் செயல்பட வேண்டும். கழகத்திற்காக பணியாற்ற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Trending News

Latest News

You May Like