1. Home
  2. தமிழ்நாடு

மக்களவைத் தேர்தலில் எனக்கு 39 தொகுதிகளிலும் பணி உள்ளது - அண்ணாமலை..!

1

தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களிடம் பேசியதாவது, என்னை பொருத்தவரையில் எல்லா நாளும் பெண்கள் நாளாக தான் பார்க்கிறேன். 365 நாளும் பெண்களுக்கான நாள்தான் மகளிர் தின வாழ்த்துக்களை தனியாக தெரிவிக்க வேண்டும் என்று இல்லை ஒரு காலத்தில் பெண்களுக்கு இட ஒதுக்கீடு கொடுக்க வேண்டும் என்று பேசியது எல்லாம் மாறி பெண்கள் தான் இந்தியாவை இன்று முன்னின்று வழிநடத்தி கொண்டிருக்கிறார்கள்.

அந்த அளவிற்கு நமது நாடு மாறியுள்ளது நமது சகோதரிகள் மென்மேலும் வளர வேண்டும் அதற்கு என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். மேற்கத்திய நாடுகளில் பெண்களுக்கு வாக்களிக்கும் உரிமை பெறுவதற்காகவும் மேலும் உரிமைகளை பெற போராட்டங்கள் நடைபெற்றது அது மகளிர் தினமாக கொண்டாடப்பட்டது. அப்படியே இங்கும் அது கடைபிடிக்கப்படுகிறது.

பிரதமரை பொறுத்த வரையில் மோடி சிலிண்டர் மூலமாக இணைப்பு பெற்றவர்களுக்கு 300 ரூபாய் மானியமாக இருந்தது 400 ரூபாயாக மாறி உள்ளது மற்றவர்களுக்கு 200 ரூபாய் மானியமாக இருந்தது 300 ரூபாயாக மாறி உள்ளது.

ஆனால் தமிழகத்தில் திராவிட முன்னேற்றக் கழ கம் தேர்தல் வாக்குறுதியில் சிலிண்டர் விலை குறைப்போம் என கூறி வந்தார்கள் ஆனால் இதுவரையில் எதுவும் குறைக்கவில்லை ஆனால் பாரத பிரதமர் தொடர்ந்து நமது தாய்மார்களுக்கு தற்பொழுதும் சிலிண்டர் விலையை குறைத்துள்ளார் என்று தான் கூற வேண்டும்.

ஜாபர் சாதிக் திமுகவின் அயலக அணியில் இருந்து கொண்டு வெளிநாட்டில் தொடர்புகளை ஏற்படுத்தி அதன் மூலமாக போதை பொருளை விற்பனை செய்துள்ளார்.

இதற்கு பதில் திமுக அளிக்க வேண்டும் இதற்கு டிஜிபி ஏன் பேச வேண்டும் விலை குறைவுதான் அவ்வளவு விலையில்லை என்றெல்லாம் பேசுகிறார் இது தேவையற்றது சைலேந்திர பாபுவை இப்படித்தான் கோயம்புத்தூரில் சிலிண்டர் வெடித்ததாக பேச வைத்தார்கள் இது குறித்து திமுக நபர்கள் தான் பேச வேண்டும்.

உதயநிதி ஸ்டாலின் புகைப்படத்தை பதிவு செய்து ஏன் அதை நீக்கினார் திமுகவின் அங்கத்தில் இருப்பவர்கள் நடந்த தவறு என்ன என்பதை திமுக தான் கூற வேண்டும் டி ஜி பி புகைப்படம் கொடுத்தார் என எங்கும் குற்றம் சுமத்தப்படவில்லை அவர்கள் போட்டோ எடுக்கும் நபர்களைப் பற்றிய தகவல்களை சேகரித்து போட்டோ எடுக்க வேண்டும் என்பதெல்லாம் இல்லை இதற்கு டிஜிபி விளக்கம் கொடுப்பதை விட திமுக தான் மக்கள் மன்றத்தில் பேச வேண்டும் 

பாஜக சார்பில் வரும் 7, 8-ம்தேதிகளில் தென்காசியில் போதைப் பொருட்களுக்கு எதிரான நிகழ்ச்சி நடத்த உள்ளோம். மக்களவைத் தேர்தலில் எனக்கு 39 தொகுதிகளிலும் பணி உள்ளது. தேர்தலில் நான் போட்டியிடுவேன் என்று சொல்லவே இல்லை. பிரதமர் மோடி என்ன சொன்னாலும், அதற்குக் கட்டுப்படுவேன். இவ்வாறு அண்ணாமலை கூறினார்.

 

Trending News

Latest News

You May Like