1. Home
  2. தமிழ்நாடு

கர்ப்பமானேன்.. அம்மாவிற்கு தெரிந்து பெரிய பிரச்சனையாச்சு.. ஷகிலா பேட்டி!

Q

1990களில் நடிகை ஷகிலா பல கவர்ச்சிப் படங்களில் நடித்து தனக்கென தனி ரசிகர் கூட்டத்தையே வைத்து இருந்தார்.
கவர்ச்சி படங்களில் நடிப்பதை நிறுத்திவிட்ட ஷகிலா,விஜய் தொலைக்காட்சியில் குக்வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியில் இறுதி வரை வந்து விதவிதமான சமையல்களை செய்து அசத்தினார். இதுவரை கவர்ச்சி நடிகை என பெயர் எடுத்த ஷகிலா மீதான கண்ணெட்டத்தையே அந்த நிகழ்ச்சி மாற்றியது. அதுமட்டுமில்லாமல் குக்வித் கோமாளியில் கலந்து கொண்ட அனைவரும் ஷகிலாமா என அன்போடு அழைத்தனர்.
இந்நிலையில், பிரபல யூடியூப் சேனல் ஒன்றுக்கு ஷகிலா அளித்த பழைய பேட்டி தற்போது வைரலாகி வருகிறது. அதில், நான் சின்ன பெண்ணாக இருக்கும் போது, ஆண் நண்பரால் கர்ப்பம் ஆனேன். அது கர்ப்பம் என்று கூட எனக்கு தெரியாது. ஏன் என்றால் எனக்கு பீரியட் நார்மலாக வராது, ஐந்து, ஆறு மாதம் கழித்துத்தான் வரும். இதனால், எனக்கு நான் கர்ப்பமாக இருக்கிறேன் என்று கூட தெரியவில்லை. ஒரு முறை என் அம்மா, என் வயிற்றை தடவி பார்த்துவிட்டு நீ கர்ப்பமா இருக்கே என்று சொன்னார்கள். அப்போது நான் மிகவும் சின்ன பெண் என்பதால், இந்த குழந்தை வேண்டாம் என்று குழந்தையை கரு கலைப்பு செய்துவிட்டார்கள். அந்த நேரத்தில் அம்மா செய்தது சரியான முடிவு தான் என நான் நினைக்கிறேன். அதையும் மீறி குழந்தை பிறந்திருந்தால் அது முறையற்ற குழந்தையாக தான் இருந்திருக்கும், அந்த நபருடன் இன்னும் நான் பேசிக் கொண்டுதான் இருக்கிறேன். இப்படி ஒரு பெரிய தப்பை நான் செய்த போது கூட என் அம்மா என்னை அடிக்கவோ, திட்டவோ இல்லை என்று ஷகிலா அந்த பேட்டியில் பேசி உள்ளார்.

Trending News

Latest News

You May Like