1. Home
  2. தமிழ்நாடு

உன் கணவனால் பலமுறை கர்ப்பமானேன்.. காதலியால் மனைவி சோக முடிவு ! - ஆனால் கணவர் என்ன செய்தார் தெரியுமா ?

உன் கணவனால் பலமுறை கர்ப்பமானேன்.. காதலியால் மனைவி சோக முடிவு ! - ஆனால் கணவர் என்ன செய்தார் தெரியுமா ?


கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே உள்ள எருமனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் விஜயகுமார். சென்னையில் ஐ.டி நிறுவனத்தில் பணியாற்றி வந்த இவர், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த ஷோபனா என்ற பெண்ணை திருமணம் செய்தார். 
 
இந்நிலையில், சுமார் ரூ.85 ரூபாய் சம்பளம் வாங்கிக்கொண்டிருந்த விஜயகுமார் தன் ஐ.டி வேலையை இழந்து சொந்த ஊருக்கு வந்திருந்துள்ளார். வீட்டில் விஜயகுமார் உறங்கிக்கொண்டிருக்கும் போது, அவரது செல்போனுக்கு வந்த அழைப்பை எடுத்து ஷோபனா பேசியுள்ளார். 

அப்போது மறுமுனையில் பெண் ஒருவர் பேசியதால் விபரீதம் ஏற்பட்டது. அப்பெண் தான் விஜயகுமாரின் காதலி என கூறினார். மேலும், விஜயகுமாருடன் உல்லாசமாக இருந்து பலமுறை தான் கர்ப்பம் அடைந்து கருவை கலைத்துள்ளதாகவும் கூறியிருக்கிறார். அதனை கேட்ட ஷோபனா, தன்னுடைய கணவரின் துரோகத்தை நினைத்து பேரதிச்சி அடைந்துள்ளார்.

உன் கணவனால் பலமுறை கர்ப்பமானேன்.. காதலியால் மனைவி சோக முடிவு ! - ஆனால் கணவர் என்ன செய்தார் தெரியுமா ?

இதுகுறித்து கணவரிடம் கேட்க, அவரோ வரதட்சணை கேட்டு கொடுமை படுத்தி தன் தவறை திசை மாற்றியுள்ளார். இதனால் ஷோபனா வீடியோ வெளியிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. அதாவது திருமணத்திற்கு முன்பே விஜயகுமார் ஈரோட்டைச் சேர்ந்த அனு என்ற இளம்பெண்ணை காதலித்து வந்துள்ளார்.

அப்போது அவர்களுக்கு பணம் கொடுக்கல், வாங்கல் பிரச்னை மற்றும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்தனர். எனினும் தன்னை ஏமாற்றிய விஜயகுமாரை பழிதீர்க்க சமயம் பார்த்து இருந்தார். 

இந்த சூழலில் விஜயகுமாருக்கு அப்பெண் போன் செய்தப்போது, அவரது மனைவி பேசியதால் தங்கள் காதல் லீலைகளை அனு அவிழ்த்துவிட்டுவிட்டார். 

இதனால் பிரச்னை எழுந்த நிலையில், தான் சிக்கிக் கொண்டதை மறைப்பதற்காக மனைவியிடம் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியுள்ளார். விஜயகுமாருடன் சேர்ந்து அவரது தாயார் செல்வராணியும் ஷோபனாவை துன்புறுத்தி, வசைபாடி பேசியுள்ளார். 

இதனால் தற்கொலை செய்துகொள்ளும் நிலையில், வீடியோ எடுத்தபடி பேசிய ஷோபனா,  “என் சாவுக்கு காரணமானவங்க யாரையும் சும்மா விடாதீங்க. சசாகப்போற நான்தான் யாருக்கும் பிரயோஜனப்படல. என் அப்பாவோட ஆசைப்படி, என் உடலை தானம் பண்ணிடுங்க! நான் போறேன்.. என் புள்ளைய பாத்துக்கங்க” என்று பேசி வெளியிட்டுவிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

இதன் அடிப்படையில், விஜயகுமார், விஜயகுமாரின் தந்தை அன்பழகன், தாய் செல்வராணி உள்ளிட்டோர் மீது ஷோபனாவை தற்கொலைக்கு தூண்டியதாக வழக்குப்பதிவு செய்த கடலூர் போலீஸார், அவர்கள் மூவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இதனிடையே. ஷோபனாவின் மனதை குழப்பும் வகையில் பேசி தற்கொலைக்கு தூண்டியதாக அனு மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்ய வேண்டும் என்று ஷோபனாவின் உறவினர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

newstm.in 

Trending News

Latest News

You May Like